Categories: சினிமா

அழகா இருக்கீங்க டியர் ஆர்த்தி.! விக்னேஷ் சிவன் போட்ட கமெண்ட்..வச்சி செய்யும் நெட்டிசன்கள்.!

வெளியிட்டது

நயன்தாராவின் திருமண உடை போன்றே அணிந்து போட்டோ சூட் நடத்திய காமெடி நடிகை ஆர்த்தியின் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் ட்விட்டரில் பகிர்ந்து அழகாக இருக்கிறீர்கள் ஆர்த்தி என்று பதிவிட்டுள்ளது வைரல் ஆகி வருகிறது. தமிழ் திரை உலகில் பெண் காமெடியாளர்களில் முக்கியமானவர் தான் நடிகை ஆர்த்தி. இவர் சின்னத்திரை மற்றும் வெள்ளி திரையில் பல படங்கள் மற்றும் நாடகங்களில் நடித்திருக்கிறார். மேலும் பிக்பாஸ் சீசன் 1ல் கலந்து கொண்டு சர்ச்சையான போட்டியாளர்களில் ஒருவராகவும் இருந்தார். இவர் தற்போது நயன்தாரா திருமணத்தின் போது அணிந்திருந்த உடை போலவே அணிந்து பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி இருக்கிறது. நயன்தாராவிற்கும் விக்னேஷ் சிவனுக்கும் ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. அப்போது நயன்தாரா ஒரு சிவப்பு நிற உடையில் தோன்றினார். அவரது உடை பிரத்தியேகமான ஆடை வடிவமைப்பு குழுவால் வடிவமைக்கப்பட்டிருந்தது. அந்த ஆடையில் பழங்கால கோவில்களின் கோபுரங்கள் மற்றும் சின்னங்கள் போன்றவை பொறிக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டிருந்தன.

அழகா இருக்கீங்க டியர் ஆர்த்தி.! விக்னேஷ் சிவன் போட்ட கமெண்ட்..வச்சி செய்யும் நெட்டிசன்கள்.! 1

மேலும் அவர் அணிந்திருந்த நகைகளும் அதிலிருந்த கற்களும் மிக உயர்ந்த விலை உடையதாகும். இது அனைவரும் கவனத்தையும் ஈர்த்தது. இந்த நிலையில் நயன்தாரா அணிந்திருந்த சிவப்பு நிறை உடை போலவே ஆர்த்தி பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் அணிந்து கொண்டு கலந்து கொண்டிருந்தார். பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் ஆஹா கல்யாணம் என்ற ஒரு போட்டி நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு ஜோடிகளும் திருமண கோலத்தில் வந்து நடனமாடி வருகின்றனர். அந்த வகையில் ஆர்த்தியும் சமீபத்தில் திருமணம் முடித்த நயன்தாராவின் உடை போலவே அணிந்திருந்தார். இதை அவரே சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு என்ன கொடுமை சார் என்றும், எக்ஸ்பக்டேசன் வெசஸ் ரியாலிட்டி என்றும் ஜாலியாக பதிவிட்டு இருந்தார். அந்தப் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்த விக்னேஷ் சிவன், நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் மை டியர் ஆர்த்தி என்று பதிவிட்டு இருந்தார்.

இதைப் பார்த்த நெட்டிசன்கள் விக்னேஷ் சிவனை மரணமாக கலாய்த்து வருகின்றனர். இரவு வீட்டுக்கு வாடி உனக்கு சோறு இல்லை என்று விக்னேஷ் சிவனை பார்த்து நயன்தாரா கூறுவது போலவும் மீம்ஸ்களை போட்டு வருகின்றனர். ஆனால் சிலரோ அந்த பதிவு விக்னேஷ் சிவனால் போடப்படவில்லை, விக்னேஷ் சிவனின் கணக்கை பயன்படுத்தி நயன்தாரா தான் அந்த பதிவை போட்டு உள்ளார் என்றும் கூறி வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்