“வருகிறான் சோழன்”!!”நாளை வெளிவரும் பொன்னியின் செல்வன் டீஸர்”

"வருகிறான் சோழன்"!!"நாளை வெளிவரும் பொன்னியின் செல்வன் டீஸர்" 1

தமிழ் திரையுலகின் முத்த இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மாபெரும் பொருட்செலவில் தயாராகியுள்ள படம் பொன்னியின் செல்வன். பொன்னியின் செல்வன் கதை படமாக பல நாயகர்களும் இயக்குனர்களும் போராடி உள்ளனர். எம்.ஜி.ஆர் ஆசைப்பட்ட இந்த கல்கியின் தொடர் பின்னர், புராதான கதைகளை கொண்டு படம் எடுத்து வரும் இயக்குனர் மணிரத்தினத்திற்கும் பெரிய ஆவல் இருந்தது. நடிகர் விஜயிடமும், தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவிடனும் பேச்சு வார்த்தை கூட நடந்தது.

விளம்பரம்

"வருகிறான் சோழன்"!!"நாளை வெளிவரும் பொன்னியின் செல்வன் டீஸர்" 3

ஆனால் சில காரணங்களால் கைவிடப்பட்டு இப்பொது மீண்டும் மணிரத்னம் இயக்கத்திலேயே விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ் ராஜ், ஜெயராம், ஐஸ்வர்யா ராய், திரிஷா என நட்சத்திர பட்டாளத்துடன் இந்த படம் தயாராகி வருகிறது. தமிழ் திரையுலகில் இருந்து பாகுபலிக்கு போட்டியாக உருவாகிறது என எதிர்பார்க்கும் பலருக்கும் இந்த படம் எடுக்க கஷ்ட பட்ட வரலாறு தெரியாது.

விளம்பரம்

"வருகிறான் சோழன்"!!"நாளை வெளிவரும் பொன்னியின் செல்வன் டீஸர்" 5

படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வரும் என்வும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்த படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தில் நடிக்கும் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா ஆகியோரின் அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ஏற்கனவே பெரும் எதிர்ப்பார்ப்பை கிளப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது. விரைவில் படத்திலிருந்து முதல் பாடல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்
தொடர்புடையவை  இயக்குனர் நெல்சனுக்கு உயர் ரக காரை பரிசளித்த கலாநிதி மாறன்.! வீடியோ இதோ.!

"வருகிறான் சோழன்"!!"நாளை வெளிவரும் பொன்னியின் செல்வன் டீஸர்" 7

இப்பொது மற்றொரு குதூகல அறிவிப்பாக பொன்னியின் செல்வன் படத்தின் டீஸர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. சினிமா வல்லுநர் ஸ்ரீதர் பிள்ளை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சென்னை ட்ரட் சென்டர் நிலையத்திலுள்ள தனியார் அரங்கத்தில் இந்த விழா நாளை நடைபெற உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

விளம்பரம்

"வருகிறான் சோழன்"!!"நாளை வெளிவரும் பொன்னியின் செல்வன் டீஸர்" 9

விளம்பரம்

Leave a Comment