பொன்னியின் செல்வன் படம் வெளியாக இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில் படத்தின் டிக்கெட் அனைத்தும் விற்று தீர்ந்திருக்கும் செய்தி தற்போது கிடைத்துள்ளது. பல முன்னணி நடிகர்களின் கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தை இயக்குனர் மணிரத்தினம் இயக்கி சாதித்து காட்டியிருக்கிறார். இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கிறது. முதல் பாகம் வரும் 30ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். படத்தின் பிரமோஷன் பணிகளுக்காக படக்குழு திருவனந்தபுரம், பெங்களூர், ஹைதராபாத், சென்னை, மும்பை, டெல்லி என அனைத்து ஊர்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சுற்றுப்பயணத்தில் இயக்குனர் மணிரத்தினம் உட்பட, படத்தில் நடித்திருக்கும் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்திக், திரிஷா, ஐஸ்வர்யா ராய், இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் என அனைவரும் பிரோமோஷன் பணிகளில் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். படத்திற்கான டிக்கெட் புக்கிங் இன்று காலை தொடங்கியது. தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்து தியேட்டர்களிலும் ஹவுஸ்புல் ஆகி இருக்கிறது. வெளிநாடுகளிலும் பொன்னியின் செல்வன் படத்திற்கு மிகுந்த வரவேற்பு இருக்கிறது. அங்கும் பல தியேட்டர்களில் டிக்கெட் உடனே தீர்ந்து இருக்கின்றன.

குறிப்பாக அமெரிக்காவில் பிரீமியர் காட்சி மூலமாக மட்டும் இதுவரை 4 லட்சத்து 40 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் வசூலாக எடுக்கப்பட்டுள்ளது. இதுபோல் பிற நாடுகளிலும் வசூலை படம் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திரைப்படம் வெளியாக இன்னும் ஐந்து நாட்களுக்கே இருக்கும் நிலையில் படத்திற்கு கேடிஎம் இப்போதே கொடுக்கப்பட்டுள்ளது. எனவே விநியோகஸ்தர்கள் மிக மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் வரை 78,000க்கும் அதிகமான டிக்கெட்டுக்கள் விற்று தீர்ந்துள்ளது. வர்த்தக ஆய்வாளர் ரமேஷ் பாலா இன்று ஒரு ட்வீட் ஒன்றை செய்துள்ளார். அதில் அமெரிக்காவில் மட்டும் நான்கு லட்சம் கோடி டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் 3.25 கோடிக்கு மேல் மதிப்புள்ள வசூலை குவித்துள்ளது.

இதே போல் சிங்கப்பூரிலும் பொன்னியின் செல்வன் படத்தின் டிக்கெட் முன்பதிவு அதிகமாக இருக்கிறது. இந்தியாவில் தமிழில் மட்டும் 1.37 கோடி வசூலையும், தெலுங்கு பதிப்பில் இருந்து 9 லட்சமும் கிடைத்துள்ளது. படம் வெளியாக இன்னும் ஐந்து நாட்கள் இருப்பதால் இந்த வசூல் எண்ணிக்கை இன்னும் அதிகமாக கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படம் வெளியான பின்பு குறுகிய காலத்திலேயே ஆயிரம் கோடிக்கும் அதிகமான வசூலை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது