படங்கள் ஹீரோவை நோக்கி மட்டுமே இல்லாமல் இப்பொது மாறிக்கொண்டு வரும் வேலையில், நிறைய பெண்கள் சார்ந்த அவர்களை கதையின் நாயகியாக வைத்து பல படங்கள் வெளிவந்து கொண்டிருக்கிறன. முன்னர் இது போன்ற படங்கள் பெரும்பாலும் குடும்ப சூழ்நிலைகளையே ஒட்டி எடுக்கப்பட்டன. இப்போது பல்வேறு நிலைகளில் இந்த வகையிலான படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான முதல் படம் “அட்டகத்தி”. இதில் நடிகர்கள் தினேஷ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், இயக்குனர் பா.இரஞ்சித் என பலரும் திரைத்துறையில் அறிமுகமானார்கள். பெரும் வெற்றி பெற்ற இந்த படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

சன் டிவியின் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இவருடைய வாழ்க்கையை தொடங்கிய இவர், இப்பொது வெற்றிகரமான நடிகையாக வளம் வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளிலும் பிஸியாக உள்ளார்.
இவருடைய திரை வாழ்க்கையில் முக்கிய படம் “காக்க முட்டை”. இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் இவர் 22 வயதிலேயே இரண்டு மகன்களுக்கு தாயாக நடித்து அனைவரையும் பிரமிக்க வைத்தார். இதற்கு அடுத்து தொடர்ந்து தர்மதுரை, ரம்மி, வடசென்னை, நம்ம வீடு பிள்ளை, வானம் கொட்டட்டும் என அனைத்து படங்களும் பெயர் சொல்லும் அளவிற்கே தேர்ந்து எடுத்தே நடித்து வருகிறார்.

இப்பொது அந்த வகையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் “டிரைவர் ஜமுனா” என்ற படம் உருவாகியுள்ளது. பெண் டாக்ஸி டிரைவர் ஒருவரின் வாழக்கையை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது. வீட்டின் எதிர்ப்பை மீறி ஒரு பெண் டாக்ஸி டிரைவராக அவர் அவ்வாறு ஒரு பயணத்திற்காக செல்லும் பொது, தெரியாதனமாக ரவுடி கும்பல் ஒன்றின் நடுவில் சிக்குகிறார்.
போலீஸ், அரசியல் சூழ்ச்சி, ஒரு IT நபர், ரௌடிகள் என பலரையும் அந்த ஒரே கட்டத்தில் அவர் சந்திக்கிறார். அதில் இருந்து அவர் எவ்வாறு தப்பிக்கிறார், இந்த பிரச்சனைகளின் பின்னனி என்ன என்பது இந்த படத்தின் கதையாக இருக்கிறது. இந்த படத்தை 2013ஆம் வெளியான “வத்திக்குச்சி படத்தின் இயக்குனர் கின்ஸ்லின் இயக்கியுள்ளார். அந்த படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த விடியோவை நீங்களும் காண…..
Video Courtesy – DriverJamuna