“அசைவம் சமைக்கும் ஐயர் ஆத்து பொண்ணு” நயன்தாராவின் ‘அன்னபூரணி’ ட்ரைலர் வெளியானது.!

வெளியிட்டது

தமிழ் திரையுலகின் லேடிஸ் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாரா தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் தான் ‘அன்னபூரணி’. இந்த திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. 2005 ஆம் ஆண்டு ‘ஐயா’ படத்தின் மூலமாக தமிழ் திரையுலகுக்கு அறிமுகமாகி இன்று தமிழின் உச்சபட்ச நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நயன்தாரா. ஹிந்தி படமான ‘ஜவான்’ படத்தில் நடித்ததன் மூலமாக பாலிவுட்டில் காலடி பதித்திருக்கும் அவர், தொடர்ந்து தமிழ்ப்படங்களில் நடித்து வருகிறார். இவர் கடைசியாக நடித்த ‘இறைவன்’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் தற்போது இவர் நடித்த முடித்திருக்கும் ‘அன்னபூரணி’ திரைப்படம் வருகிற டிசம்பர் 1ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. வீடியோ கொடுக்கப்பட்டுள்ளது.

"அசைவம் சமைக்கும் ஐயர் ஆத்து பொண்ணு" நயன்தாராவின் 'அன்னபூரணி' ட்ரைலர் வெளியானது.! 1
படம் வெளியாக இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில் படக் குழுவினர் ப்ரோமோஷன் பணிகளை தீவிர படுத்தியுள்ளனர். அதன் முதல் பகுதியாக தற்போது ட்ரைலர் வீடியோ வெளியாகியிருக்கிறது. ட்ரைலரைப் பார்க்கும் பொழுது ஐயர் வீட்டு பெண்ணாக இருக்கும் நயன்தாரா சமையலில் அதிக ஆர்வம் காட்டுகிறார். அதற்காக அவர் அசைவ உணவுகளையும் சமைக்க முயற்சி செய்கிறார். இதனால் அவருக்கு சில பிரச்சனைகள் ஏற்படுகிறது. அவர் சந்தித்த பிரச்சினைகள் என்ன? அந்த சவால்களை முறியடித்து அவர் வெற்றி பெற்றாரா? என்பது தான் படத்தின் கதையாக இருக்கும் என ட்ரைலரை பார்க்கும் பொழுதே தெரிகிறது.

இந்தப் படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாக நடிகர் ஜெய் நடித்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் சத்யராஜ்_ கே எஸ் ரவிக்குமார்,ரெடிங் க்ங்ஸ்லி, சச்சு, சுரேஷ் சக்கரவர்த்தி ஆகியோர் நடித்திருக்கின்றனர். நிலேஷ் கிருஷ்ணா இயக்கியிருக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார். தற்போது வெளியாகியிருக்கும் படத்தின் ட்ரைலரை நீங்களும் காண்.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Saregama Tamil

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்