நடிகை வனிதா விஜயகுமாரை பிரதீப் ஆதரவாளர் ஒருவர் தாக்கியதாக வனிதா பதிவொன்றை பதிவிட்டு இருந்தார். நள்ளிரவில் பிக் பாஸ் குறித்து விமர்சனம் செய்துவிட்டு, பேட்டியை முடித்துவிட்டு கிளம்பும் வழியில் காருக்கு அருகில் மறைந்திருந்த ஒருவர் தன்னை பிரதீப்பிற்கு ரெக்கார்டு கொடுக்கிறீர்களா? அதற்கு நீ சப்போர்ட் பண்றியா? என்று சொல்லி தன்னுடைய முகத்தில் குத்தி விட்டதாகவும், ஆனால் தான் போலீசுக்கு செல்லவில்லை என்றும் புகைப்படத்தை வெளியிட்டு அதிரடியை கிளப்பியிருந்தார். முகத்தில் காயத்துடன் இருந்த அவரது புகைப்படத்தை பகிர்ந்த பலரும், சிசிடிவி காட்சிகளை கொண்டு அந்த நபரை கைது செய்ய வேண்டும் என்று கூறி வந்தனர். ஆனால் சிலரோ இது வனிதா செய்த ஸ்டன்ட் என்று கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

தற்போது இது குறித்து பிரபல நடிகையும் அரசியல் விமர்சகருமாக இருக்கும் கஸ்தூரி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார். கஸ்தூரியும் வனிதாவும் பிக் பாஸ் சீசன் மூன்றில் போட்டியாளராக கலந்து கொண்டவர்கள். அவர்கள் இருவருக்குமே பிக் பாஸில் இருந்த போது ஏழாம் பொருத்தமாக தான் இருந்தது. இந்த நிலையில் வனிதா தாக்கப்பட்டது குறித்து பதிவிட்டுள்ள கஸ்தூரி, “அடிச்சவன் யாரோ, அதுக்கு பிரதீப் எப்படி பொறுப்பாக முடியும். தன் reviewவால் வந்த வினை. போலீசுக்கும் போகமாட்டார். வனிதாவின் ருசிகரமான பொய்கள் யூடியூப்க்கும் விஜய் டிவிக்கும் content க்கு வேண்டுமானால் பயன்படும், போலீஸிடம் வியாபாரமாகுமா?.”

“நான் இந்த சமயத்தில் கருணை காட்ட வேண்டும் என நினைக்கிறேன், ஆனால் சனியன் இந்த நேரம் பார்த்து என் வாய் சும்மா இருக்க மாட்டிக்கிது. இப்பொது எனக்கு மதுமிதா கையை வெட்டிக்கொண்டு நின்ற பொழுதிலும் நெஞ்சில் ஈரமே இல்லாமல் வனிதா அண்ட் கோ அவரை மேலும் மேலும் கொடுமை செய்தது நினைவுக்கு வருகிறது. இது வெறும் விளையாட்டு என்பதுஅப்போ தெரியலையா? வன்முறைக்கு நீங்கள் மட்டுமல்ல யாருமே தகுதி இல்லாதவர்கள் தான்” என்று பதிவிட்டு இருக்கிறார். அவரின் இந்த பதிவை பலரும் ஆதரித்து மறுபகிர்வு செய்து வருகின்றனர்.
I should show sympathy, but சனியன் இந்த நேரம் பார்த்து எனக்கு மதுமிதா கையை வெட்டிக்கொண்டு நின்ற பொழுதிலும் நெஞ்சில் ஈரமே இல்லாமல் வனிதா அண்ட் கோ அவரை மேலும் மேலும் gherao செய்தது நினைவுக்கு வருகிறது… It's only a game அப்போ தெரியலையா? Nobody deserves violence, not just you.
— Kasturi (@KasthuriShankar) November 26, 2023