Categories: சினிமா

காதலருடன் திருப்பதியில் ஏழுமலையான் தரிசனம்!ஆன்மிக பயணம் சென்ற நயன்தாரா!!

வெளியிட்டது
காதலருடன் திருப்பதியில் ஏழுமலையான் தரிசனம்!ஆன்மிக பயணம் சென்ற நயன்தாரா!! 1

நயன்தாரா தனது காதலரான இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து கோவில்களுக்கு செல்வது ஒன்றும் புதிதல்ல என்றாலும், இந்த முறை அவர் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். ஏழுமலையானை தரிசித்துவிட்டு கோவில் வளாகத்தில் நயன்தாரா மற்றும் விக்கி இருவரும் கையை பிடித்துக் கொண்டு நடந்து சென்றபோது எடுத்த வீடியோ வெளியாகியுள்ளது. அவர்கள் அப்படி கை கோர்த்து நடந்த விதம் பிடித்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏழுமலையானை தரிசித்துவிட்டு கோவில் வளாகத்தில் நயன்தாரா மற்றும் விக்கி இருவரும் கையை பிடித்துக் கொண்டு நடந்து சென்றபோது எடுத்த வீடியோ வெளியாகியுள்ளது. அவர்கள் அப்படி கை கோர்த்து நடந்த விதம் பிடித்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன் நயன்தாரா விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து அத்திவரதரை தரிசித்தார். அப்பொழுது பூசாரிகள் நயன்தாராவையே பார்த்துக் கொண்டிருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. நயன் அத்திவரதரை தரிசிக்க, பூசாரிகளோ நயன்தாராவை தரிசித்தனர் என்று சமூக வலைதளங்களில் பல மீம் போடப்பட்டது.முன்னதாக பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பொற்கோவிலுக்கும் அவர்கள் ஜோடியாக சென்றுள்ளனர். சாமி விஷயத்தில் நயன்தாரா மிகுந்த ஈடுபாடு காட்டி வருகிறார்.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்