தோல்வி படத்துக்கு பிறகு வெற்றி – நடிகர் சிவகார்த்திகேயன்!!

தோல்வி படத்துக்கு பிறகு வெற்றி - நடிகர் சிவகார்த்திகேயன்!! 1

சிவகார்த்திகேயன் நடித்து வெளியான ‘நம்ம வீட்டு பிள்ளை’ படம் சமீபத்தில் வெளியாகி வெற்றி அடைந்துள்ளது. இதில் பாரதிராஜா, சமுத்திரக்கனி, சூரி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய பிரபலங்கள் நடித்துள்ளனர். பாண்டிராஜ் இயக்கினார். முந்தைய ‘மிஸ்டர் லோக்கல்’ படம் தோல்வி அடைந்தது என்பது வருத்தத்தை கொடுத்தாலும் சிவகார்த்திகேயனுக்கு இந்த வெற்றி மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதற்காக ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். நம்ம வீட்டு பிள்ளையை வெற்றிப் படமாக்கிய ரசிகர்கள், தியேட்டர் அதிபர்கள், வினியோகஸ்தர்கள் மற்றும் படத்தின் இயக்குனர் பாண்டிராஜ், படக்குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.அடுத்து விஷாலின் இரும்புத்திரை படத்தை எடுத்து பிரபலமான பி.எஸ்.மித்ரன் இயக்கும் ஹீரோ படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து இருக்கிறார். சூப்பர் ஹீரோ கதையம்சத்தில் உருவாகிறது. இதன் படப்பிடிப்பு முடிந்து டப்பிங், ரீ ரிக்கார்டிங், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விளம்பரம்

இதில் நடிக்கும் சிவகார்த்திகேயன் தோற்றம் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகும் என்று அறிவித்து உள்ளார்கள். இது அவரது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக நடிக்கும் ஆதித்ய வர்மா படத்தில் ஒரு பாடலையும் சிவகார்த்திகேயன் எழுதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

Leave a Comment