நயன்தாராவுடன் கைகோர்க்கும் 2 பிரபல ஹீரோக்கள்! அட இதுல ஒருத்தர் BiggBoss போனவராச்சே

வெளியிட்டது

‘சிறுத்தை சிவா’ இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் “அண்ணாத்த” படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ். மேலும் லேடி சூப்பர் ஸ்டார் தாமே நடித்து தயாரிக்கும் “காத்து வாக்குல இரண்டு காதல்” படமும் முடிவடையும் நிலையில் உள்ளது.

நயன்தாராவுடன் கைகோர்க்கும் 2 பிரபல ஹீரோக்கள்! அட இதுல ஒருத்தர் BiggBoss போனவராச்சே 1

விக்னேஷ் சிவன் இயக்கி வரும் இப்படத்தில் சமந்தா, விஜய் சேதுபதி, யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். 2022இல் ரீலிஸ் ஆகும் என எதிர்ப்பார்க்கப் படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து சமீபத்தில் லீக் ஆன ஒரு வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் நயன்தாரா தன் அடுத்த படத்திற்குத் தயாராகி விட்டார் என கோலிவுட் வட்டாரம் கூறுகிறது.

தெனாலிராமன், எலி படங்களை இயக்கிய “யுவராஜ்” இயக்கத்தில் “ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்” தயாரிப்பில் உருவாகிறது. படத்தின் பெயர் இன்னும் முடிவாகவில்லை எனவும் இதில் நயன்தாராவுடன் ‘விதார்த்’ மற்றும் ‘ஸ்ரீ’ நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஷூட்டிங் தொடங்குகியுள்ள நிலையில் அடுத்த ஆண்டில் இப்படத்தை திரையிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Kiruthika

அகந்தை முன்னே செல்லும், அவமானம் பின் தொடரும். I've danced to AR Rahman's tunes and cheered for Rajinikanth, and now, I'm your go-to journalist for all things Tamil entertainment, offering an insider's perspective that's second to none.

வெளியிட்டது

புதிய செய்திகள்