Categories: சினிமா

தனது இரு மகன்களுடன் புத்தாண்டை கொண்டாடிய நயன்தாரா.! அழகிய புகைப்பட தொகுப்பு இதோ.!

வெளியிட்டது

தமிழ் திரை உலகின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா தனது இரண்டு இரட்டை மகன்களுடன் இணைந்து புத்தாண்டை மிகச் சிறப்பாக கொண்டாடி இருக்கிறார். அந்த புகைப்படங்களை அவர் தற்போது இணையதளத்தில் பதிவிட்டு இருக்கிறார். சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக தனது திரைப்பயணத்தை தொடங்கிய நயன்தாரா 2002ம் ஆண்டு மலையாள படம் ஒன்றில் நடித்ததன் மூலமாக திரையுலகிற்கு அறிமுகமானார். பின்னர் தமிழில் 2005ம் ஆண்டு வெளியான ‘ஐயா’ படத்தின் மூலமாக தமிழ் திரையுலகுக்கு என்ட்ரி கொடுத்தார்.

தனது இரு மகன்களுடன் புத்தாண்டை கொண்டாடிய நயன்தாரா.! அழகிய புகைப்பட தொகுப்பு இதோ.! 1

திரையுலகிற்கு வந்து 20 ஆண்டுகளில் சுமார் 75 படங்களுக்கும் மேல் நடித்து முடித்து இருக்கிறார். மேலும் இவருக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்கிற பட்டத்தையும் ரசிகர்கள் கொடுத்துள்ளனர். நயன்தாரா நடிப்பில் கடைசியாக வெளியான ‘அன்னப்பூரணி’ திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. எனவே அடுத்த கதையை மிக கவனத்துடன் தேர்ந்தெடுத்து நடிப்பதில் மும்மரம் காட்டி வருகிறார் நயன்தாரா.

குறிப்பாக பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் அவர் ஆர்வம் செலுத்தி வருகிறார். தற்போது கைவசம் ‘டெஸ்ட்’ என்கிற படத்திலும், ‘மண்ணாங்கட்டி’ என்கிற படத்திலும் நடித்து வருகிறார். மேலும் தனது கணவர் விக்னேஷ் சிவன் உடன் இணைந்து ‘ரவுடி பிக்சர்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

இது மட்டுமில்லாமல் உதடு பராமரிப்புக்காக பயன்படுத்தப்படும் லிப் பாம் கம்பெனி ஒன்றையும், தோல் பராமரிப்பு சாதனங்கள் விற்கும் ‘9 ஸ்கின்கேர்’ என்கிற இரண்டு நிறுவனங்களையும் அவர் நடத்தி வருகிறார். நயன்தாராவின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை அவருக்கு இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் மலர்ந்தது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘நானும் ரவுடிதான்’ படத்தின் நடித்துக் கொண்டிருந்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் சென்னையில் தனியார் ரிசார்ட்டில் வைத்து 2022ம் ஆண்டு மிகப் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.

இந்த தம்பதிகளுக்கு உயிர் ருத்ரோனில், உலக் தெய்வீக் என்றுஇரட்டைக் குழந்தைகள் பிறந்தது. மகன்களின் முகத்தை சமீபத்தில் அனைவருக்கும் காட்டி புகைப்படங்களை வெளியிட்டு இருந்த அவர், தொடர்ந்து மகன்களுடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை பகிர்ந்து வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் இன்று புத்தாண்டை முன்னிட்டு அவர் தனது இரட்டை குழந்தைகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து இருக்கிறார். அந்த புகைப்படங்களுக்கு தற்போது லைக்குகளும் குவிந்து வருகிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்