கல்யாணம் முடிந்த கையோடு 1 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கிய நயன்தாரா..அந்த மனசு தான் சார் கடவுள்

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் இன்று சென்னையில் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது.நானும் ரவுடிதான் படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது நயன்தாராவுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் காதல் மலர்ந்தது. ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்த இருவரும் திருமணம் ஆகாமலேயே சேர்ந்து வாழ்ந்து வந்தனர். அடிக்கடி திருப்பதிக்கு செல்வது, கேரளாவில் உள்ள கோவில்களுக்கு செல்வது, வெளிநாடுகளுக்கு டூர் செல்வது என்று ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இருவரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்னும் தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி படங்களை தயாரித்தும் வருகின்றனர்.

கல்யாணம் முடிந்த கையோடு 1 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கிய நயன்தாரா..அந்த மனசு தான் சார் கடவுள் 1

விளம்பரம்

கடைசியாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடித்த படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருந்தனர். அதன்படி படம் வெளியாகி சில மாதங்கள் கழித்து இன்று இருவரும் திருமணம் செய்துகொண்டுள்ளனர். திருப்பதியில் திருமணத்தை நடத்த திட்டமிட்டு இருந்த நிலையில் பலரும் திருமணத்தில் கலந்து கொள்ள இருந்ததால் மகாபலிபுரத்திற்கு மாற்றி நிகழ்ச்சியை மாற்றி வைத்திருந்தார் விக்னேஷ் சிவன்

தொடர்புடையவை  சமுத்திரகனியுடன்ஆ௧்ஷனில் களமிறங்கும் பிக்பாஸ் நடிகை!

கல்யாணம் முடிந்த கையோடு 1 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கிய நயன்தாரா..அந்த மனசு தான் சார் கடவுள் 3

விளம்பரம்

தற்போது இவர்களின் திருமணம் சென்னை மகாபலிபுரத்தில் ஒரு ரிசார்ட்டில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. காலை 10.25 மணிக்கு கெட்டி மேளம் முழங்க இந்து முறைப்படி தாலியை நயன்தாரா கழுத்தில் அணிவித்தார் விக்னேஷ் சிவன். இந்த திருமணத்தில் தமிழின் முண்ணனி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, விஜய் சேதுபதி, இயக்குனர் மணிரத்னம், ஏ.ஆர் ரகுமான் உள்ளிட்ட பல பிரபலங்கள் நேரில் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளனர். திருமணத்தில் பல வகையான மெனு வகைகள் வைக்கப்பட்டுள்ளன.

கல்யாணம் முடிந்த கையோடு 1 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கிய நயன்தாரா..அந்த மனசு தான் சார் கடவுள் 5

விளம்பரம்

திருமணம் முடிந்த கையேடு 1 லட்சம் ஆதரவற்றவர்களுக்கு அன்னதானம் வழங்கி உள்ளனர் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன். திருவண்ணாமலை, முதியோர் இல்லங்கள் போன்ற இடங்களில் வாழும் ஆதரவற்ற ஏழைகளுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்துள்ளனர் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும். இந்த செய்தியை கேட்ட நயன்தாரா ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment