Categories: சமூகம்

என்ன ஒரு ஓரமா நிக்க வச்சிடுவாங்க.! அதான் அங்க போறதே இல்ல.! வேதனையில் பேசிய நயன்தாரா.!

வெளியிட்டது

நீண்ட நாள் இடைவேளைக்குப் பிறகு நடிகை நயன்தாரா தற்போது பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். நாளை அவரின் கனெக்ட் திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் தற்போது அவர் இந்த பேட்டியை அளித்திருக்கிறார். அஸ்வின் சரவணன் இயக்கத்தில் டிசம்பர் 22ஆம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் தான் கனெக்ட். இந்த திரைப்படத்தை ஒட்டி நயன்தாரா பல ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். நேற்றைய தினம் அவர் தனது கணவருடன் இணைந்து பிரீமியம் ஷோவை பார்த்திருந்தார். இந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பின்னர் அவர் ஒரு பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். அதில் நயன்தாரா பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். இந்த வருடம் கிறிஸ்துமஸ் வந்தால் தான் நடிக்க வந்து 20 ஆண்டுகள் நிறைவடைய இருக்கிறது என்றும், திரைத் துறையை பொறுத்தவரை நடிகர்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் நடிகைகளுக்கு கொடுக்கப்படுவதில்லை என்று கூறினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

என்ன ஒரு ஓரமா நிக்க வச்சிடுவாங்க.! அதான் அங்க போறதே இல்ல.! வேதனையில் பேசிய நயன்தாரா.! 1

ஒரு இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சிக்கு சென்றால் கூட ஓரமாக நம்மை அமர வைத்துவிட்டு நடிகர்களுக்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள். பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகள் தற்போது தான் நிறைய வரத் தொடங்கி இருக்கிறது. 15 முதல் 20 பெரிய நடிகர்களின் படம் வெளியாகும் சமயத்தில் ஐந்து படங்கள் பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படுகின்றன. ஆரம்ப காலத்தில் மட்டுமல்ல தொடர்ந்து என் மீது விமர்சனங்கள் வைத்துக் கொண்டே தான் இருக்கிறார்கள். அண்மையில் கூட கனெக்ட் படத்தின் புகைப்படத்தை பகிர்ந்து அதை கலாய்த்து வருகின்றனர். குண்டாகிவிட்டால் வெயிட் போட்டார்கள் என்றும், ஒல்லியாகி விட்டால் மிகவும் ஒல்லியாக இருக்கிறீர்கள் என்றும் தன் மீது விமர்சனங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. படத்துக்கு ஏத்த மாதிரி நான் தன்னுடைய உருவத்தை மாற்றிக் கொள்கிறேன். ஆனால் நான் எது செய்தாலும் அது தவறாகி விடுகிறது. அந்த விமர்சனங்களை எல்லாம் நாம் கண்டு கொள்வதுமில்லை அதைப்பற்றி நான் யோசிப்பதும் இல்லை என்று பேசினார்.


சமீபத்தில் கூட ஒரு நடிகை என் பெயரைச் சொல்லாமல் என்னை விமர்சித்திருந்தார். மருத்துவமனையில் இருக்கும்போது கூட முழு மேக்கப் போட்டிருப்பதாக கூறியிருந்தார். அதற்கென்று தலையை விரித்து போட்டு தலைவிரி கோலமாக இருக்க முடியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மேலும் பேசிய நயன்தாரா தன்னுடைய காதல் எல்லாம் என்னுடைய கணவர் தான் எங்கள் காதல் எங்கிருந்து காதலிக்க தொடங்கினோமோ அன்றிலிருந்து அவர் என் காதலுக்கான அர்த்தமாக இருக்கிறார் அவர் உடன் இருக்கும் பொழுது என்ன நடந்தாலும் அவர் பார்த்துக் கொள்வார் என்கிற தைரியம் எனக்கு இருக்கிறது என்று நயன்தாரா பேசினார். அவரின் அந்த முழு வீடியோவை நீங்களும் காண..! Watch the below video..!

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்