Categories: சினிமா

பாப் கட்டிங், பாவடை சட்டையுடன் குட்டி நயன்தாரா.. வைரலாகும் நயனின் பள்ளிக்கூட போட்டோ..!

வெளியிட்டது

நயன்தாராவின் பள்ளிக்கால புகைப்படம் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. குட்டைப் பாவாடையுடன் அழகாக அமர்ந்து இருக்கும் புகைப்படத்தை நயன்தாராவின் ரசிகர்கள் இணையத்தில் பரப்பி வருகின்றனர். தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார்ராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் 2005 ஆம் ஆண்டு வெளியான ஐயா படத்தின் மூலமாக தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார். திரைத்துறைக்கு வந்து 20 ஆண்டுகளில் 75 படங்களுக்கும் மேலாக நடித்து யாரும் செய்ய முடியாத சாதனையை செய்து இருக்கிறார் நயன்தாரா. இவர் நடிப்பில் தமிழில் கடைசியாக வெளியான படம் காத்து வாக்குல ரெண்டு காதல். அதற்கு பின்னர் அவர் தற்போது கனெக்ட், கோல்டு போன்ற படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கனெக்ட் படத்தை அவரது கணவர் விக்னேஷ் சிவன் தயாரித்து வருகிறார்.

பாப் கட்டிங், பாவடை சட்டையுடன் குட்டி நயன்தாரா.. வைரலாகும் நயனின் பள்ளிக்கூட போட்டோ..! 1

தனது ஏழு ஆண்டுகால காதலரான விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் மாதம் சென்னையில் வைத்து திருமணம் செய்து கொண்டார் நயன்தாரா. அவர்களுக்கு தற்போது இரட்டை குழந்தைகள் பிறந்திருக்கிறார்கள். அந்த புகைப்படங்களை சமீபத்தில் விக்னேஷ் சிவன் தனது instagram பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். இருவரும் வாடகைத்தாய் முறையில் பெற்றோர்கள் ஆகியிருக்கின்றனர். இந்த பிரச்சனைகள் எல்லாம் ஓய்ந்த பிறகு இருவரும் தங்களது பட வேலைகளில் பிஸியாக இருக்கின்றனர். நயன்தாரா தற்போது ஹிந்தியில் ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் படத்தில் நடித்து வருகிறார். விக்னேஷ் சிவன் சில படங்களை தயாரித்து வருகிறார்.

இந்த நிலையில் நயன்தாராவின் பள்ளிக்கால குரூப் போட்டோ ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. முதல் வரிசையில் பாப் கட்டிங்கில் குட்டைப் பாவாடையுடன் அழகாக அமர்ந்திருக்கும் புகைப்படத்தை அவரது ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். நயன்தாராவை கண்டுபிடித்து சொல்லுங்கள் பார்ப்போம்.!

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்