பிக்பாஸ் வீட்டில் அசீம் மயங்கி விழுந்துள்ள சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமானதால் அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது பிக்பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக கலந்து கொண்டு இருப்பவர் முஹம்மது அசீம். இவர் ஆரம்பம் முதலே ஏதாவது ஒரு சண்டை சர்ச்சரவு என வீட்டில் நிம்மதி இல்லாமல் இருந்து வருகிறார். வீட்டின் நிம்மதியை குறைக்கும் முதல் நபராகவும் இவர் இருந்து வருகிறார். இவர் முதல் வாரத்திலேயே ஆயிஷாவை வாடி போடி என்று ஒருமையில் பேசினார். பின்னர் விக்ரமன், அமுதவாணனை வாடா போடா என்று ஒருமையில் பேசினார். அன்று தொடங்கி இன்று வரை தொடர்ந்து சர்ச்சைகள் நீடித்துக் கொண்டே வருகிறது. விளையாட்டை விளையாட்டை பார்க்காமல் சந்தையாகவே பார்த்து வருகிறார் அசீம்.

இந்த வாரம் பழங்குடியினர் வெர்சஸ் ஏலியன் டாஸ்க் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த டாஸ்க் தொடங்கிய நாள் முதலே சண்டையாக இருந்து வருகிறது. விளையாட்டின் போது பொறுமையை இழக்கும் அசீம் இந்த முறையும் பொறுமையை இழந்து ஆரம்பம் முதலே கத்த தொடங்கினார். ஜனனியுடன் அவருக்கு சிறிய வாக்குவாதம் ஏற்பட்டது அப்போது சென்னை அவரை லூசு போல் பேசாதீர்கள் என்று சொல்ல சண்டை பெரிதானது. பின்னர் இன்று அமுதவாணனிடம் சென்று என்னை அடிடா அடிடா என்று மீண்டும் ஒருமையில் பேச தொடங்கினார் அசீம். இதனால் பிக்பாஸை பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை பார்த்தால் நமக்கும் இரத்த அழுத்தம் வந்துவிடும் என்று கமெண்ட்களில் தெரிவித்து வந்தனர். மேலும் அசீமை ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

ஆனால் டாஸ்க் முடிந்து அனைவரும் அமர்ந்து இருந்த வேளையில், நேற்று எதிர்பாராத விதமாக அசீம் மயங்கி கீழே சரிந்தார். வீட்டில் இருந்த ஹவுஸ்மேட்ஸ் அவரை தூக்கிக் கொண்டு மெடிக்கல் ரூமுக்கு சென்றனர். அங்கு அவருக்கு ரத்த அழுத்தம் 190 இருந்ததாகவும் சிறிது ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் விக்ரமன் வெளியே வந்து அனைவரிடமும் கூறினார்.
