Categories: சினிமா

கண்ணாலேயே கொல்லுராங்களே நம்ம தலைவி.! ஸ்பெயினில் நயனின் அழகிய புகைப்படங்கள்

வெளியிட்டது

நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தற்போது இரண்டாவது ஹனிமூனை ஸ்பெயினில் கொண்டாடி வருகிறார்கள். அந்த புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் 2015 ஆம் ஆண்டு முதல் காதலித்து வருகிறார்கள். நானும் ரவுடிதான் படத்தில் நடித்து கொண்டிருந்தபோது, அதன் இயக்குனரான விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் காதல் மலர்ந்தது.. விக்னேஷ் சிவன் போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்த போதிலும், நானும் ரவுடிதான் இந்த படம் தான் அவருக்கு திறப்பு முனையாக அமைந்தது. இந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. பின்னர் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தீவிரமாக காதலிக்க தொடங்கினர். நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் ஜூன் ஒன்பதாம் தேதி சென்னையில் மகாபலிபுரத்தில் வைத்து ஒரு தனியார் ரிசார்ட்டில் மிக பிரம்மாண்டமாக நடந்தது.

கண்ணாலேயே கொல்லுராங்களே நம்ம தலைவி.! ஸ்பெயினில் நயனின் அழகிய புகைப்படங்கள் 1

இவர்கள் இருவரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகின்றனர். ஜூன் ஒன்பதாம் தேதி திருமணத்திற்கு பிறகு இவர்கள் தாய்லாந்துக்கு ஹனிமூனுக்கு சென்று வந்தனர். பின்னர் இருவரும் படங்களில் நடிக்க பிஸியாகிவிட்டனர். நயன்தாரா தற்போது ஹிந்தியில் அட்லி இயக்கத்தில் ஜவான் என்ற படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். நயன்தாராவுக்கு இது முதல் ஹிந்தி படமாகும். விக்னேஷ் சிவனும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததால் அவர் அங்கு பிஸியாகிவிட்டார். செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28 தொடங்கி ஆகஸ்ட் 10 வரை மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது. இதன் துவக்க நிகழ்ச்சி முதல் இறுதி நிகழ்ச்சி வரை மிகச் சிறப்பாக இயக்கி இருந்தார் இயக்குனர் விக்னேஷ் சிவன், இந்த நிலையில் இவர்களின் திருமண வீடியோ விரைவில் வெளியாகும் என்று ப்ரோமோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை சந்தோஷப்படுத்தி இருந்தது netflix நிறுவனம்.

தற்போது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் மீண்டும் ஸ்பெயினுக்கு சுற்றுலாவிற்கு சென்றுள்ளனர். இன்ஸ்டாகிராமில் மிக ஆக்டிவ்வாக இருக்கும் விக்னேஷ் சிவன் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் இதற்காக நேற்று விமானத்தில் புறப்பட்ட புகைப்படங்களை விக்னேஷ் சிவன் பதிவிட்டு இருந்தார். அதில் நயன்தாராவின் கையைப் பிடித்து முத்தம் கொடுத்தும் அவரை மடியில் அமர வைத்தும் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார். மேலும் வேலை வேலை என்று பிஸியாக இருந்ததால், எங்களுக்கான நேரத்தை ஒதுக்கி என் மனைவியுடன் பார்சிலோனாவுக்கு செல்கிறேன் என்று பதிவிட்டு இருந்தார் விக்னேஷ் சிவன். இன்று ஸ்பெயினில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை மீண்டும் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்