Categories: சினிமா

தனது இரு குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய நயன் விக்கி தம்பதிகள்.! அழகிய புகைப்படம்.!

வெளியிட்டது

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தற்போது தனது இரு மகன்களுடன் கிறிஸ்துமஸை கொண்டாடி இருக்கிறார்கள். அந்த வீடியோவை அவர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்கள். தமிழ் உலகின் லேடி சூப்பர் ஸ்டார் ஆக இருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் திரைக்கு வந்து 20 ஆண்டுகளில் சுமார் 75 படங்களுக்கு மேல் நடித்து முடித்து இருக்கிறார். கடைசியாக அவர் தமிழில் கனெக்ட் என்கிற ஒரு பேய் படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இந்த படத்தை நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் தயாரிக்கிறார். ரவுடி பிக்சர்ஸ் சார்பில் இந்த படம் தயாரிக்கப்பட்டு உள்ளது. மேலும் நயன்தாரா தனது முதல் ஹிந்தி படமான ஜவான் படத்திலும் நடித்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தனது இரு குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய நயன் விக்கி தம்பதிகள்.! அழகிய புகைப்படம்.! 1

சமீபத்தில் இரட்டை குழந்தைகளுக்கு தாயான நயன்தாரா சமூக வலைதள பக்கங்களில் அப்போது சில வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். அவருக்கு என்று தனியாக சமூக வலைத்தள கணக்குகள் இல்லை. தனது கணவரான விக்னேஷ் சிவனின் கணக்குகளை பயன்படுத்தி அவர் புகைப்படங்களை அல்லது வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். மேலும் நயன்தாரா பற்றிய ஒரு தகவல் சமீப காலமாக பரவி வருகிறது. அதில் தனது இரட்டை குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்காக அவர் சில நாட்கள் நடிப்பிலிருந்து விலக இருப்பதாகவும், ஒரு வருட காலத்திற்குப் பின்னர் மீண்டும் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. விரைவில் இது குறித்து நயன்தாரா அறிவிப்பார் என்று தெரிகிறது.

இந்த நிலையில் நயன்தாரா தற்போது தனது மகன்களுடன் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தற்போது தனது இரு மகன்களுடன் கிறிஸ்துமஸை கொண்டாடி இருக்கிறார்கள். அந்த குழந்தைகளுக்கு சிகப்பு நிற உடை அணிவித்து இருக்கின்றனர். மிகுதியான அன்பு! நீங்கள் எப்பொழுதும் கனவு காணும் வாழ்க்கையை வாழ அனைவருக்கும் எல்லா மகிழ்ச்சியையும் ஆசீர்வாதங்களையும் தர கடவுளிடம் நேர்மையான பிரார்த்தனைகள்! என்று அந்த வீடியோவை பகிர்ந்து உள்ளனர். Watch the below Video.! 

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்