Categories: சினிமா

நடிகர் Dhanush இயக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோவம் படத்தின் First Single வெளியாகியது..!

வெளியிட்டது

தமிழ் தொடங்கி தற்போது தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஹாலிவுட் வரை உயர்ந்திருப்பவர் தனுஷ். இவருக்கு மிகப்பெரிய அளவு ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது. தமிழில் சிறிய நாயகனாக அறிமுகமாகி பல விமர்சனங்களை தாங்கி தன்னை தானே செதுக்கி இன்று உலக சினிமா வரை உயர்ந்து இருப்பவர் தனுஷ். பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல முகங்களை கொண்டவர் தனுஷ். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நடிகர் Dhanush இயக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோவம் படத்தின் First Single வெளியாகியது..! 1

பவர் பாண்டி என்ற படத்தினை இயக்கி இயக்குனராக உருவெடுத்த தனுஷ், தனது 50வது படமான ராயன் படத்தையும் இவரே இயக்கி இருந்தார். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ள நிலையில், தற்போது தனுஷ் இளைஞர்களை வைத்து இயக்கிய நிலவுக்கு என் மேல் என்னடி கோவம் என்ற படத்தினை அடுத்து வெளியிட தயாராகி இருக்கிறார்.

தற்போது இப்படத்தின் கோல்டன் ஸ்பாரோ என்ற பாடலை வெளியிட்டுள்ளது படக்குழு.ஜிவி பிரகாஷ் இசையில் அறிவு பாடல்வரிகளில் இப்பாடல் உருவாகி உள்ளது. நடிகை பிரியங்கா மோகன் சிறிய கேமியோ கொடுத்து உள்ளார். இப்பாடலுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பினை கொடுத்து உள்ளனர். தனுஷும் இப்பாடலை பாடி உள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்து இருக்கிறது.

Embed Video Credits : WUNDERBAR FILMS

வெளியிட்டது

புதிய செய்திகள்