13 வருடங்களுக்கு பிறகு பிறந்த பெண் குழந்தை…ஆனந்த கண்ணீரில் மிதந்த நீலிமா | Neelima Rani

வெளியிட்டது

13 வருடங்களுக்குப் பிறகு தனக்கு மகள் பிறந்துள்ளதையும், மகளின் பெயரையும் அறிவித்துள்ளார் நீலிமா ராணி. தமிழ் சின்னத்திரையில் ஒரு காலத்தில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்தவர் நீலிமா ராணி. கதாநாயகி வேடம் மட்டுமில்லாமல் குணச்சித்திரம், துணை வேடங்கள், வில்லி கதாபாத்திரம் என எந்த வேடத்தை ஏற்றாலும் நடித்து அசத்திவிடுவார் நீலிமா ராணி. கமல் நடித்த தேவர் மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக திரைத்துறைக்கு அறிமுகமானார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் பணியாற்றி வருகிறார் நீலிமா ராணி.

13 வருடங்களுக்கு பிறகு பிறந்த பெண் குழந்தை...ஆனந்த கண்ணீரில் மிதந்த நீலிமா | Neelima Rani 1

இதனிடையே நீலிமாவிற்கும் அவருடன் சீரியலில் நடித்து வந்த அஸ்வின் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு மூத்த பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. பின்னர் நீலிமா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்தார். கர்ப்பமாக இருக்கும் போதே அடிக்கடி போட்டோ ஷூட் செய்து வந்தார். யாரும் செய்யாத வகையில் வித்தியாசமான போட்டோ ஷூட்டுகளை செய்து வந்தார். தாமரை மேல் கர்ப்பிணியாக அம்மன் அமர்ந்து இருப்பது போல வேடமிட்டு போட்டோ ஷூட்டுகளை நடத்தி வந்தார் நீலிமா. தாய்மையை வலியுறுத்தும் விதமாக இந்த போட்டோஷூட் எடுக்கப்பட்டதாக நீலிமா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

தற்போது நீலிமா அழகான பெண் குழந்தையை பெற்றுள்ளார். திருமணம் ஆகி 13 ஆண்டுகள் கழித்து மீண்டும் இளவரசி குழந்தை பிறந்துள்ளதாக அவர் தெரிவித்து இருந்தார். நேற்று புத்த பூர்ணிமா என்பதால் தனது மகளின் புகைப்படத்தைப் பதிவிட்டு தனது மகளின் பெயர் அத்வைத்தா என்றும் அறிவித்துள்ளார் நீலிமா. அவருடைய ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்