அறிமுகமான ஒரே படத்தில் ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களை தன்னை பற்றி பேச வைத்தவர் நடிகை சாய் பல்லவி. அதிக மேக்-அப் போட்டுகொண்டு கிளமர் மட்டுமே தெரிஞ்ச நடிகைகள் மத்தியில், எதார்த்தமாக ரசிகர்களுக்கு பிடித்து போனார். பெரும்பாலும் இவர் அதிகமாக மேக்-அப் போடுவதும் இல்லை அழகு சார்ந்த நிறுவனங்களை விளம்பரம் படுத்துவதும் இல்லை.

மலையாளம் மட்டுமின்றி தொடர்ந்து தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். அண்மையில் நடிகர் கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயனுடன் ஒரு படத்தில் இணைந்துள்ளார். அது மட்டுமின்றி நடிகர் ராணா வுடன் நடித்த “விராட்ட பருவம்” படம் வெளியாக தயாராகி உள்ளது. இப்பொது “கார்கி” என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் தற்போது ரசிகர்களிடம் மாட்டிக்கொள்ளாமல் முகத்தை மோதிக்கொண்டு தப்பித்து வேகமாக நடந்து போகும் வீடியோ சமூகவலைத்தளத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது
உண்மையில் அவர் தெலுங்கில் நடிகர் மகேஷ் பாபுவின் நடிப்பில் வெளியான “சர்க்காரு வாரு பாட்ட” படத்தை ஹைதராபாதில் ஒரு திரையரங்கில் பார்த்து விட்டு போகும் போது யாரோ ஒரு ரசிகர் எடுத்த வீடியோ இது. நடிகர் மகேஷ் பாபுவிற்கு நிறைய பெண் ரசிகைகள் இருப்பது போல நடிகை சாய் பல்லவியும் அவருக்கு பெரிய ரசிகை என்பதை பல முறை மேடைகளில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எப்போதும் சினிமா நட்சத்திரங்களை நேரில் பார்த்தால் நம்முடைய ரசிகர்கள் பழம் மேல் ஈ மொய்ப்பது போல மொய்த்து விடுவார்கள். இதனாலேயே பெரும்பாலும் நடிகர்கள் வெளியில் வராமலும் அவ்வாறு வந்தாலும் பெரிய பாடிகார்டுடன் வர வேண்டிய நிலைமை அவர்களுக்கு உள்ளது.