ராஜா ராணி 2 சீரியலில் இருந்து நடிகை ஒருவர் விலை உள்ளதாக வந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. விஜய் டிவி என்றாலே காமெடி, கலாட்டா, பொழுதுபோக்கு அம்சங்களுக்கு குறைவு இருக்காது. அதிலும் விஜய் டிவி சீரியல்கள் பல இல்லத்தரசிகளின் பொழுதுபோக்காக உள்ளது. அதில் முக்கியமான சீரியலாக உள்ளது தான் ராஜா ராணி 2. ராஜா ராணி பார்ட்-1ல் ஆல்யா மானசாவும், சஞ்சீவும் நடித்து அசத்தியிருப்பார்கள். மாபெரும் வரபேற்பை பெற்றதை தொடர்ந்து ராஜா ராணி 2 எடுக்க முடிவு செய்யப்பட்டது. இதில் சரவணன் என்ற கதாபாத்திரத்தில் சித்துவும் சந்தியா என்ற கதாபாத்திரத்தில் ஆல்யாவும் நடித்து வந்தனர்.

இதில் ஆல்யா இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்ததால் நாடகத்திலிருந்து விலகிவிட்டார். இதனால் சந்தியாவாக ரியா என்பவர் நடித்து வந்தார். இவரையும் மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். வழக்கம் போல டிஆர்பி ரேட்டிங்கிலும் இந்த சீரியல் முதலிடத்தில் உள்ளது. ஐபிஎஸ் ஆக வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்ற போராடும் பெண்ணும், அதற்கு உறுதுணையாக இருக்கும் கணவன் பற்றிய கதை. இது ஏற்கனவே ஹிந்தி சீரியலான தியா அவுர் பாத்தி ஹம்-ன் ரீமேக் ஆகும். தற்போது இந்த சீரியலில் இருந்து மேலும் ஒரு முக்கியமான கதாபாத்திரம் வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Youtube Video Code Embed Credits: Galatta

அது வேறு யாருமில்லை. வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வரும் அர்ச்சனா தான். சந்தியாவுக்கு இணையாக மக்கள் மத்தியில் பேசப்படும் கதாபாத்திரமாக இருக்கிறார் அர்ச்சனா. ஆரம்பத்தில் தொகுப்பானியாக தன் வாழ்க்கையைத் தொடங்கிய இவர் ராஜா ராணி சீரியல் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தார். இவருக்கும் பாரதி கண்ணம்மா நடிகர் அருண் பிரசாத்தும் காதலித்து வருவதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. டிஆர்பியில் முதலிடத்தில் இருக்கும் ராஜா ராணி சீரியலில் இருந்து அர்ச்சனா விலகுவது ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அந்த செய்தியை நீங்களும் காண.. Watch the below Video..