ஏம்மா உங்களுக்கு எல்லாம் ஈவு இரக்கமே இல்லையா? பெண்களிடம் கோபத்தில் கத்திய கோபிநாத்.!

வெளியிட்டது

நீயா நானா நிகழ்ச்சியில் இருந்து தற்போது கோபிநாத் வெளியேறி இருக்கும் ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் நீண்ட வருடங்களாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ஒரு ரியாலிட்டி ஷோ தான் நீயா நானா. எதிரெதிர் கருத்துகளைக் கொண்ட மக்களை அமரவைத்து விவாதித்து, அதற்கு பதில் சொல்லும் ஒரு நிகழ்ச்சியாக இது இருக்கிறது. கடந்த 2006ம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் ஞாயிற்றுக்கிழமை தோறும் ஒளிபரப்பாகி வருகிறது. சமூகத்தில் இருக்கும் பலதரப்பட்ட ஏற்றத்தாழ்வுகளை களைவதற்காகவும், இரண்டு எதிர் எதிர் கருத்துக்களை கொண்டவர்களை அமர வைத்து பேசி ஒரு முடிவுக்கு வரும் நிகழ்ச்சியாக இருக்கிறது. சமீபத்தில் கூட நீயா நானா நிகழ்ச்சியில் பேசிய ஒரு பெண் தற்போது மருத்துவராகி அதே நிகழ்ச்சிக்கு வந்திருந்த காணொளிகள் இணையத்தில் வைரலானது. இந்த நிகழ்ச்சியை பல வருடங்களாக கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஏம்மா உங்களுக்கு எல்லாம் ஈவு இரக்கமே இல்லையா? பெண்களிடம் கோபத்தில் கத்திய கோபிநாத்.! 1

கோபிநாத் அறந்தாங்கியில் பிறந்து வளர்ந்தவர். இவர் வேலை தேடி சென்னைக்கு வந்தார். தனியார் வானொலி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து வந்த அவர் பின்னர் விஜய் டிவிக்கு மாறினார். இவர் தொகுத்து வழங்கிய குற்றம் நடந்தது என்ன? நிகழ்ச்சி மிகப்பெரிய வெற்றி அடைந்தது. ஆங்கிலம் கலக்காமல் தமிழில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவரில் கைதேர்ந்தவராக இருக்கிறார் கோபிநாத். தமிழ் மொழி நடைக்காகவும் தனி பாங்கிற்காகவும் மிகவும் அறியப்படுகிறார் கோபிநாத். இது மட்டுமல்லாமல் தெருவெல்லாம் தேவதைகள், நேர் நேர் தேமா, நீயும் நானும், ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க போன்ற பல புத்தகங்களை இவர் எழுதி இருக்கிறார். ஆனால் இவருக்கு திருப்புமனையாக ஒரு நிகழ்ச்சி என்றால் அது நீயா நானா தான். இந்த நிகழ்ச்சி மூலமாக ஒவ்வொரு வீட்டிலும் ஒரு அங்கத்தினராகவே மாறிப் போயிருக்கிறார் கோபிநாத். இந்த வாரம் எடுத்துக் கொண்ட தலைப்பு திருமணத்திற்குப் பிறகு அம்மா பேச்சை கேட்டு செயல்படும் பெண்கள் மற்றும் அந்த பெண்களின் கணவர்கள் என்கிற தலைப்பு.


இதில் பல பெண்களும் தன் தாயார் கூறினால் தன்னுடைய கணவர் உடைகளை கூட மாற்றிக் கொள்ள வேண்டும், ஏனென்றால் அவர்கள் பாசத்தில் அவ்வாறு கூறுகிறார்கள். அதே சமயம் கணவரின் தாய்மார்கள் தன் உடை நன்றாக இல்லை மாற்றிக்கொள் என்று கூறினால் எங்களால் அதை செய்ய முடியாது என்று தொடர்ந்து அனைவரும் ஒருமித்த கருத்தாக பேசிக் கொண்டிருந்தனர். இதனால் கடுப்பான கோபிநாத் நான் இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுகிறேன் என்று சொல்லி பாதியிலேயே வெளியேறுகிறார். ஆனால் இது காமெடிக்காக செய்யப்பட்டதே ஆகும். இருந்த போதிலும் பெண்கள் இவ்வாறு செய்வது கோபிநாத்துக்கு கடுப்பை கிளப்பி இருப்பதாக பலரும் கமெண்டில் கருத்து தெரிவித்திருக்கின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

 

Youtube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்