Categories: சினிமா

படிக்காத கணவனை இளக்காரமாக பேசிய மனைவி.. தகுந்த பாடம் புகட்டிய கோபிநாத்

வெளியிட்டது

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களுக்கு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் வார இறுதி நாட்களில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியை சொல்லலாம். இரு எதிர் எதிர் கருத்துக்கள் உடைய தரப்பினரை அமர வைத்து, அவர்களின் கருத்தைப் பெற்று இறுதியில் எந்த கருத்து சிறந்ததோ அதற்கு பரிசு கொடுக்கும் ஒரு ரியாலிட்டி ஷோ தான். இது விவாத மேடை போல் அல்லாமல் கருத்து பரிமாற்றம் நடத்தப்படும் ஒரு நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியை வெகு ஆண்டுகளாக கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார். வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது இந்த நிகழ்ச்சி தற்போது வார இறுதியில் மதியம் 12:30 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பல தலைப்புகள் விவாதிக்கப்பட்டிருக்கின்றன. இது விவாதம் மட்டுமல்லாமல் சமூக சிந்தனையையும் தூண்டி இருக்கிறது. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

படிக்காத கணவனை இளக்காரமாக பேசிய மனைவி.. தகுந்த பாடம் புகட்டிய கோபிநாத் 1

அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் கடந்த வாரம் நடந்த வீட்டு வேலைக்காரர்கள் வெர்சஸ் வீட்டு ஓனர்கள். இதில் பேசிய பலரும் ஓனர்கள் தங்களுக்கு தனி தட்டு, டம்ளர் என நவீன தீண்டாமை போல் எவ்வாறு கொடுமைப்படுத்துகிறார்கள் என்பதை விளக்கி கூறினர். இதன் பின்னரே பலருக்கும் வீட்டு வேலை செய்பவர்களின் அருமையும், கஷ்டமும் புரிந்தது. அது போல இந்த வாரம் எடுத்துக் கொண்டுள்ள தலைப்பு, படிக்காத கணவர்கள் வெர்சஸ் படித்த மனைவிகள். இதில் படித்த மனைவிகள் பலரும் தங்கள் படிக்காத கணவர் பற்றி ஒவ்வொரு குறைகளை கூறிவந்தனர். அப்படி ஒரு மனைவி தனது கணவன் பற்றி ஒரு கருத்தை கூறினார். அவர் பேசும் போது மகளின் ரேங்க் கார்டில் கையெழுத்திடும் போது, கணவருக்கு படிக்கத் தெரியாமல் ஒரு மணி நேரம் பார்த்துக் கொண்டு இருப்பார். இதனால் குழந்தையின் ரேங்க் கார்டில் இப்போதெல்லாம் தானே கையொப்பம் இடுவதாக அந்த பெண் கூறினார்.

இதற்கான விளக்கத்தை அந்த தந்தையிடம் கேட்டார் கோபிநாத். அதற்கு அவர் கூறிய அந்த பதில் அனைவரையும் நெகிழ வைத்தது. அவர் கூறும் போது தான் பள்ளிக்கு அவ்வளவாக செல்லவில்லை. சென்ற சில காலம் கூட 7 மார்க், 8 மார்க் என்றுதான் வாங்குவேன், ஆனால் என் மகள் 80, 90 மார்க் வாங்குவதை பார்க்கும் போது எனக்கு மிகுந்த ஆனந்தமாக இருக்கிறது. அதனால் தான் ஒரு மணிநேரம் பார்க்கிறேன் என்று அந்த தந்தை வெகுளியாக கூறினார். ஆனால் அதை கேட்ட அவரின் மனைவி மீண்டும் அவர் அதற்காக பார்க்கவில்லை, ஏ பி சி டி தான் படித்துக் கொண்டிருப்பார் என்று இளக்காரமாக கூறிவிட்டு ஏளனமாக சிரித்தார். இதை கேட்ட கோபிநாத் ஒரு நிமிடம் ஆடிப் போனார். எதுவும் பேசாமல் இருந்த அவர் பின்னர் அந்த பெண்மணிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஒரு காரியத்தை செய்தார்.

தான் பெற முடியாத ஒன்றை தன் மகள் வாங்கும் பொழுது அதை ஒரு மணி நேரம் பார்த்துக் கொண்டிருக்கும் தந்தையை நான் ஒரு காவியமாக தான் பார்க்கிறேன். எனவே நிகழ்ச்சி முடியும் முன் கொடுக்க வேண்டிய பரிசை இப்போதே அவருக்கு கொடுக்கிறேன் என்று பரிசை எடுத்து வரச் சொன்னார். மேலும் அதை அவரின் மகளின் கையால் வழங்கினார். அப்போது அந்த மகள் என் தந்தை தோல்வி அடையவில்லை, அவர் வெற்றி அடைந்திருக்கிறார், எனக்காக அவர் மிகவும் கஷ்டப்படுகிறார் என்று கூறி கண் கலங்கினார்.

அந்த குழந்தைக்கு இருக்கும் அறிவு கூட அவரைப் பெற்ற அந்த படித்த தாய்க்கு இல்லையே என்று பலரும் கமெண்ட்டுகளில் திட்டி தீர்த்து வருகின்றனர்..நீங்களும் அந்த வீடியோவை காண.. Watch the below Video..

 

Youtube Video Code Embed Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்