பணக்கார பையனா பாத்து லவ் பண்ண சொன்ன தாய்.! கமெண்ட்டுகளில் கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானாவில் தற்போது தாயார் ஒருவர் பேசியிருக்கும் காணொளி வைரல் ஆகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் ரசிகர் பட்டாளங்கள் இருந்து வருகின்றனர். அந்த வகையில் விவாத நிகழ்ச்சியாக இருந்து வரும் நீயா நானாவிற்கும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி இரு எதிர் கருத்துக்களை கொண்டவர்களை ஒருங்கே அமர வைத்து அவர்களுக்கிடையே விவாதத்தை ஏற்படுத்தி முடிவை சொல்லும் ஒரு நிகழ்ச்சியாக இருந்து வருகிறது. பல்வேறு தலைப்புகளில் பல்லாயிரக்கணக்கான விவாதங்கள் நடைபெற்றிருக்கும் நிலையில் இந்த வாரம் ஒரு வித்தியாசமான தலைப்பை எடுத்துக் கொண்டிருக்கின்றனர் நீயா நானா குழுவினர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பணக்கார பையனா பாத்து லவ் பண்ண சொன்ன தாய்.! கமெண்ட்டுகளில் கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.! 1

காதலிக்க சொல்லும் பெற்றோர்கள் vs தனக்கு காதல் செட்டாகவில்லை என்று இருக்கும் பிள்ளைகள் என இரு வேறு தலைப்புகளில் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதில் பெற்றோர்கள் பலரும் தன் பிள்ளைக்கு காதல் செட்டாகவில்லை என்று வருத்தத்தில் பேசிக் கொண்டிருக்கின்றனர். ஒரு தாயார் பேசும் பொழுது தன் மகளுக்கு 23 வயது ஆகிவிட்டது, பள்ளி முடித்து, கல்லூரி முடித்து வேலைக்கும் சென்று விட்டார். ஆனால் அவருக்கு இதுவரை ஒரு லவ் லெட்டர் கூட வந்ததில்லை என்று கூறிக் கொண்டிருக்கிறார். அதற்கு பதில் அளித்த மகள், தான் என்ன செய்வது? தான் கல்லூரிக்கு ஒரு வருடம் தான் போனேன், மீதி இரண்டு வருடங்கள் கொரோனாவால் ஓடிவிட்டது. அதனால் தன்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்று பேசிக் கொண்டிருக்கிறார். அதைக் கேட்டு விழுந்து விழுந்து சிரிக்கும் கோபிநாத், அடுத்து மற்றொருவரிடம் கேள்வி எழுப்ப அந்த பெண்மணி பேசத் தொடங்கினார்.

அப்போது நானும் எனது கணவரும் விரட்டி விரட்டி காதலித்தோம். இப்போது இருக்கும் பிள்ளைகள் எல்லாம் மிகவும் பயப்படுகிறார்கள் என்று கூறிக் கொண்டிருந்தார். அப்போது அவரின் மகள் எதிர்த்தரப்பிலிருந்து இவர்கள் பணக்காரனாக பார்த்து காதலித்துக் கொள், இல்லை கார் வைத்திருப்பவனைப் பார்த்து காதலி என்று கூறுகிறார்கள் என்று வேடிக்கையாக சொன்னார். அதை பார்த்த ரசிகர்கள் கமெண்ட்களில் தற்போது அவர்களை திட்டி தீர்த்து வருகின்றனர். காசு, பணம், ஸ்டேட்டஸை பார்த்து லவ் செய்ய சொல்லுவதெல்லாம் ஒரு செயலா? என்று அந்த தாயாரை கழுவி ஊற்றி வருகின்றனர். நீங்களும் அந்த ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

Youtube Video Embed Code Credits: Vijay television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்