திருமண மண்டபத்தில் வந்து ரகளை செய்யும் கயல்..! செம்ம கடுப்பான எழில்.! அதிரடியான ப்ரோமோ.!

திருமண மண்டபத்தில் வந்து ரகளை செய்யும் கயலை எதிர்த்து தற்போது ஆவேசமாக எழில் வந்து கொண்டிருக்கிறார். அந்த அதிரடியான ப்ரோமோவை தற்போது சன் தொலைக்காட்சி வெளியிட்டு இருக்கிறது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் அவ்வப்போது முதலிடத்தையும் அப்போது இரண்டாம் இடத்தையும் தக்க வைத்துக் கொண்டிருக்கும் ஒரு தொடராக இருந்து வருகிறது. இந்தத் தொடர் தற்போது பல விறுவிறுப்பான கட்டங்களை எட்டி வருகிறது. தந்தையை இழந்த குடும்பத்தின் பாரங்களை சுமக்கும் ஒரு பெண்ணாக கயலின் கதாபாத்திரம் மிக அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது. எனவே இந்த நாடகத்தை பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது. இதில் கயலாக நடிகை சைத்ரா ரெட்டியும் எழிலாக ஆலியா மானசாவின் கணவர் சஞ்சீவும் நடித்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

திருமண மண்டபத்தில் வந்து ரகளை செய்யும் கயல்..! செம்ம கடுப்பான எழில்.! அதிரடியான ப்ரோமோ.! 1
கடந்த சில நாட்களாக எழில் மற்றும் கயல் ஆகிய இருவரின் திருமணம் குறித்த பரபரப்பு கயல் சீரியல் ரசிகர்களுக்கு எழுந்திருக்கிறது. வீட்டில் வைத்து கயல் கழுத்தில் எழில் தாலி கட்டுவது போன்ற ப்ரோமோ ஒன்று வெளியாகி இருந்தது. அந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் பலரும் இது எப்படியும் கனவாக தான் இருக்கும், எழிலை கயல் தாலி கட்ட அனுமதித்திருக்க மாட்டார் என்று கருத்துக்களை தெரிவித்து வந்தனர். அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் போலவே தற்போது நடந்திருக்கிறது. அது கனவாக முடிந்திருக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகியிருக்கிறது. அதில் திருமணம் நடக்கும் மண்டபத்திற்கு கயல் ஆட்டோவில் வந்து இறங்குகிறார். அப்போது எழிலின் தாயார் நீ எதற்காக இங்கு வந்தாய் என்று சொல்லி கயலிடம் பயங்கரமாக சண்டை இடுகிறார். அப்போது கயல் எங்கே அந்த எழில் அவரை வெளியே வரச் சொல்லுங்கள் என்று அழைக்கிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  மீண்டும் சீரியலில் களம் இறங்கிய ரட்சிதா மஹாலக்ஷ்மி.! புது கெட்டப்புடன் வெளியான வீடியோ.!

திருமண மண்டபத்தில் வந்து ரகளை செய்யும் கயல்..! செம்ம கடுப்பான எழில்.! அதிரடியான ப்ரோமோ.! 3
அப்போது எழிலின் நண்பர் எழிலிடம் நீ கயல் கழுத்தில் தான் தாலி கட்ட வேண்டும் என்று கூறிக் கொண்டிருக்கிறார், அந்நேரம் பார்த்து திருமண மண்டபத்தில் கயல் ரகளை செய்ய தொடங்கியதும், கோபமாக எழில் மண்டபத்திலிருந்து வெளியே வருகிறார். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்கிற எதிர்பார்ப்பு தற்போது எழுந்திருக்கிறது. நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Sun Tv

விளம்பரம்

Leave a Comment