சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் தற்போது சூடு பிடிக்கத் தொடங்கி இருக்கிறது. ஜனனியின் நெருங்கிய நண்பனாக இருக்கும் கௌதம் தற்போது சொத்து விவகாரங்களிலிருந்து ஜனனியையும் சக்தியையும் விலகிக் கொள்ளுங்கள் என்று கூற, ஜனனி கடுப்பாகி கத்தி இருக்கிறார். அந்த ப்ரோமோவை தற்போது சன் டிவி வெளியிட்டு இருக்கிறது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சின்னத்திரையில் டாப் ஹிட் தொடராக ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் தற்போது அப்பத்தாவின் சொத்துக்கள் தனக்கு கிடைக்கும் என்று எண்ணிக் கொண்டிருக்கும் ஆதி குணசேகரன் ஒரு புறம், அப்பத்தாவின் நாற்பது சதவீத பங்கை தன் பெயரை மாற்றிய ஜீவானந்தம் மறுபுறம், இது இரண்டுக்கும் இடையில் இருந்து தவித்துக் கொண்டிருக்கும் ஜனனி என்று ஒரு புறம் என்று கதை விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது. ப்ரோமோ வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆதிரை கரிகாலனின் திருமணம், அதைத் தொடர்ந்து முதலிரவு என்று சர்ச்சைகள் ஓயாமல் இருந்து வருகிறது. முதலிரவு முடிந்து விட்டதாக எண்ணி கரிகாலனுக்கு பல அசைவ விருந்துகளை சமைத்து எடுத்துக் கொண்டு வந்திருக்கிறார் ஜான்சி ராணி. வீட்டில் அமர்ந்து ஆதி குணசேகரன், ஞானம், கரிகாலன் என அனைவருக்கும் உணவை பரிமாறிக் கொண்டிருக்கிறார். இது ஒரு புறம் நடந்து கொண்டிருக்க, மற்றொருபுறம் கௌதமை சந்தித்து ஏதாவது முன்னேற்றம் இருக்கிறதா? என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் ஜனனி. அப்போது கௌதம் இந்த சொத்து விவகாரங்களில் இருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள் என்று ஜனனி மற்றும் சக்தியைப் பார்த்து கூறுகிறார். இதனால் கடுப்பான ஜனனி எங்களால் அது முடியாது என்று கோபமாக கத்திக் கூறிக் கொண்டிருக்கிறார். நல்ல நண்பர்களாக இருந்த ஜனனியும் கௌதமமும் தற்போது இந்த சொத்து விவகாரத்தால் பிரியும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.

மற்றொருபுறம் விபத்துக்குள்ளாகி அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அருணை தான் சென்று சந்திக்க வேண்டும் என்று ஆதிரை கூறுகிறார். மேலும் இந்த கட்டாய திருமணம் குறித்து புகார் அளித்தால் திருமணம் செல்லாது என்று ஜனனி ஒருபுறம் ஐடியா கொடுக்கிறார், இதனால் ஆதிரை கரிகாலன் திருமணம் என்ன ஆகும் என்று தெரியவில்லை. அடுத்து அப்பத்தாவின் 40 சதவீத சொத்துக்கள் யாருக்கு செல்லும் என்பதெல்லாம் தெரியவில்லை. பரபரப்பின் உச்சத்தில் தற்போது எதிர்நீச்சல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Sun Tv