“காதல் திருமணம்…ஒதுக்கி வைத்து குடும்பம்….அண்ணாக ராக்கி கட்டிக்கொண்ட கோபிநாத்”!!

வெளியிட்டது

விஜய் டிவியின் இப்போதைய வளர்ச்சிக்கு முக்கிய காரணம் அந்த சேனலில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சி. கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கடந்தும் அந்த நிகழ்ச்சி இன்னுமும் ரசிகர்களை கவர தருவதில்லை. அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் காரணமாகவே நீயா நானா கோபிநாத் என அவர் மிக பிரபலம் அடைந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"காதல் திருமணம்...ஒதுக்கி வைத்து குடும்பம்....அண்ணாக ராக்கி கட்டிக்கொண்ட கோபிநாத்"!! 1

தற்போது ஒரு மூத்த ஜெர்னலிஸ்டாக இருக்கும் அவர் பல புத்தகங்களும், இன்றைய இளைய தலைமுறைக்கு ஒரு எடுத்துக்காட்டாகவும் திகழ்கிறார். நீண்ட நெடிய வரலாறு கொண்ட இந்த நிகழ்ச்சி பல சிறப்பான விஷயங்களை குறித்து விவாதித்துள்ளது. அரசியல், சினிமா, விளையாட்டு, சமூகம், வரலாறு, குடும்பம், நட்பு, காதல், உறவு என இந்த தொடர் பேசிறாத விவாதங்களே இல்லை. பெருமபாலும் குடும்ப உறவுகளும், அதில் உள்ள சிக்கல்கள் குறித்தும் பேசும் இந்த நிகழ்ச்சி இந்த வாரம் ஒரு கலகலப்பான தலைப்பை கொண்டு வந்துள்ளது.

சென்ற வாரம் நடந்த நிகழ்ச்சியில் காதல் திருமணம் செய்து கொண்ட தமிழக மாப்பிள்ளைகளும், வெளிமாநிலத்து பெண்களும் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்வில் பங்கெடுத்த வெளிமாநிலத்து பெண் ஒருவர், “திருமணமான மாகி நிறைய ஆண்டுகள் ஆகியும் இப்பொது வரையில் எங்கள் குடும்பம் இன்னமும் சேர்த்து கொள்ளவில்லை, உங்கள பார்த்த அண்ணா மாதிரியே இருக்கீங்க…உங்களுக்கு ராக்கி காட்டவா?” என நெகிழ்வுடன் அந்த பெண் கேட்க, “அதுல என்ன இருக்கு கட்டுங்க” என கூறி கோபிநாத்தும் அந்த பெண்னின் பாசத்தை உணர்ந்து கொண்டு சம்மதித்தார். கொஞ்ச நேரம் இந்த சம்பவம் அங்கிருத்தவர்களுக்கு நெகிழ்வை கொடுத்தது. அந்த விடியோவை நீங்களும் காண….

Video Courtesy – Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்