“வீட்ல உரிய மரியாதை இல்லனா வெளியில தான சார் தேட முடியும்”!!

வெளியிட்டது

விஜய் டிவியின் இப்போதைய வளர்ச்சிக்கு முக்கிய காரணம் அந்த சேனலில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சி. கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கடந்தும் அந்த நிகழ்ச்சி இன்னுமும் ரசிகர்களை கவர தருவதில்லை. அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் காரணமாகவே நீயா நானா கோபிநாத் என அவர் மிக பிரபலம் அடைந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"வீட்ல உரிய மரியாதை இல்லனா வெளியில தான சார் தேட முடியும்"!! 1

தற்போது ஒரு மூத்த ஜெர்னலிஸ்டாக இருக்கும் அவர் பல புத்தகங்களும், இன்றைய இளைய தலைமுறைக்கு ஒரு எடுத்துக்காட்டாகவும் திகழ்கிறார். நீண்ட நெடிய வரலாறு கொண்ட இந்த நிகழ்ச்சி பல சிறப்பான விஷயங்களை குறித்து விவாதித்துள்ளது. அரசியல், சினிமா, விளையாட்டு, சமூகம், வரலாறு, குடும்பம், நட்பு, காதல், உறவு என இந்த தொடர் பேசிறாத விவாதங்களே இல்லை. பெருமபாலும் குடும்ப உறவுகளும், அதில் உள்ள சிக்கல்கள் குறித்தும் பேசும் இந்த நிகழ்ச்சி இந்த வரம் ஒரு கலகலப்பான தலைப்பை கொண்டுவந்துள்ளது.

நமது குடும்பங்களில் இருக்கும் நிறைய விஷயங்களை பற்றி இந்த நிகழ்ச்சியில் வெளிப்படையாகவே விவாதித்துள்ளனர். அதிலும் குறிப்பாக மனைவி கணவன் உறவை குறித்து பல்வேறு கோணங்களில் நீயா நானா பேசியுள்ளது. இந்த உறவில் மிக முக்கியம் கணவன் மனைவிக்குள் உள்ள புரிதல். மனைவி என தேவை என்பதை கணவன் புரிந்து கொண்டால் தான் இந்த உறவிலுள்ள அன்யோன்யம் நீடிக்கும். குறிப்பாக பொது வாழ்வில் ஈடுபடுபவர்கள் நடுவில், இது மிகவும் முக்கியம். அந்த தலைப்பில் தான் நேற்றைய விவாதம் நடந்தது.

இந்த தலைப்பில் விவாதித்த பொது பேசிய மனைவி ஒருவர், “நான் வீட்ல இருந்து குழந்தைகளை பார்த்துட்டு இருந்தபோ, இவரு ஆபீஸ்ல இருந்து வேலைய முடிச்சிட்டு வரும் போதே ரொம்ப டென்ஷனா வருவாரு சார், நாம் ஏதாவது கொஞ்சம் பேசலாம்னு போன, ஒடனே கொஞ்ச நேரம் என்ன சும்மா விடுன்னு ரொம்பவே கோவமா சொல்லிடுவாரு, அது ரொம்ப கஷ்டமா இருக்கும் சார், அப்பொய் வீட்ல மரியாதையே இல்லனா நாம அத வெளியில தான தேட முடியும்” என கூறினார். தொகுப்பாளர் கோபிநாத்தும், “பொதுவாகவே ஆம்பளைங்க அன்ப இருந்துட்டா போதும்னு நினைக்குறாங்க, ஆனா உண்மையா அவுங்களுக்குக்கான மரியாதையும் வீட்ல கண்டிப்பா கொடுத்தாகணும்” என கூறினார்.

Video Courtesy – Vijay television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்