சமீப காலமாக நடிகர் நெப்போலியனின் அமெரிக்காவில் உள்ள வீடு குறித்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வந்தது. இந்த நிலையில் தற்போது நெப்போலியன் திருநெல்வேலியில் கட்டியிருக்கும் மிகப்பெரிய மருத்துவமனை ஒன்று குறித்த காணொளி தற்போது இணையத்தில் பரவி வருகிறது. நெப்போலியன் மகன் தனுஷ் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். தனது மகன் போல பாதிக்கப்பட்டுள்ள ஏழைக் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தசைச் சிதைவு நோய்க்கு என்று தனியாக மருத்துவமனையே ஒன்றை அமைத்து இருக்கிறார் நெப்போலியன். அந்த காணொளி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 1991 ஆம் ஆண்டு சினிமா துறைக்குள் நுழைந்த இவர் பின்னர் பெரம்பலூர் தொகுதியில் இருந்து எம்பி ஆக தேர்ந்தெடுக்கப்பட்டு மத்திய இணை அமைச்சராகவும் பணியாற்றி இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட நூறு படங்களுக்கு மேல் நடித்திருக்கும் நெப்போலியன் ஒரு கட்டத்தில் திரைத்துறையில் இருந்து விலகி தற்போது முழு நேரமாக அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். நெப்போலியனுக்கு தனுஷ் குணால் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அதில் தனுஷ் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். நெப்போலியன் தன்னுடைய மகனுக்காக அமெரிக்காவில் சிகிச்சைக்காக அப்போது சென்று வந்தார். பின்னர் ஒரு கட்டத்தில் அமெரிக்காவிலேயே வீடு ஒன்றை வாங்கி செட்டில் ஆகிவிட்டார். 12,000 சதுர அடி கொண்ட அந்த வீட்டில் உள்ளேயே தியேட்டர், புட்பால் கோர்ட், லிஃப்ட் வசதிகள், அதிநவீன படுக்கைகள், செக்யூரிட்டி வசதிகள் என்று மிகப்பிரமாண்டமாக இருந்த அந்த வீட்டின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி இருந்தது. தற்போது நெப்போலியன் கட்டியிருக்கும் மருத்துவமனையில் வீடியோவும் வெளியாகி இருக்கிறது.
சமீபத்தில் பேட்டி அளித்த நெப்போலியன் தான் 23 வருடமாக ஒரு ஐடி கம்பெனி நடத்தி வருவதாகவும், தனக்கு சாஃப்ட்வேர் குறித்து எதுவுமே தெரியாது என் மனைவியும் நானும் சேர்ந்து கம்பெனியை பார்த்து கொண்டு வருவதாக கூறினார். பின்னர் தனது மகன் என்னுடனேயே இருங்கள் என்று கூறிய காரணத்தினால் அவனுடனே இருக்கத் தொடங்கினேன். அவனுக்கு 10 வயது இருக்கும் பொழுது அவனால் நடக்க முடியவில்லை, அப்போது திருநெல்வேலி அருகில் நாட்டு வைத்தியம் செய்கிறார்கள் என்று அங்கு சென்றேன். நான் என் மகனுக்கு இவ்வாறு மருத்துவம் செய்வதை சோசியல் மீடியாவில் வைரலாக்கி இருந்தார்கள். என் மகனைப் போல் பலர் இந்த வியாதியால் அவதிப்பட்டு அந்த மருத்துவமனைக்கு வந்தார்கள். ஆனால் அங்கு தங்கி மருத்துவம் செய்யும் வசதி இல்லை. பின்னர் அந்த மருத்துவர் ஒரு மருத்துவமனை தட்டிக் தாருங்கள் என்று கேட்டார். நானும் இரண்டே மாதத்தில் அந்த மருத்துவமனையை கட்டிக் கொடுத்தேன். தற்போது அங்கு பலர் மருத்துவம் பார்த்து வருகிறார்கள் என்று பேசி இருந்தார்.
தன் மகன் கஷ்டப்படுவதைப் போல் வேறு யாரும் கஷ்டப்படக் கூடாது என்றும் அவர்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவதற்காகவும் விரைவில் குணமடைவதற்காகவும் நெப்போலியன் இவ்வாறு பெரிய ஹாஸ்பிடல் ஒன்றை கட்டிக் கொடுத்திருக்கிறார். அவரின் இந்த குணத்தை அவரது ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். அந்த காணொளி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது நீங்களும் அந்த வீடியோவை காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the below video..!
Youtube Video Code Embed Credits: Unistar TV