Categories: சினிமா

மனைவியின் 50வது பிறந்த நாள்.! வேற லெவல் சர்ப்ரைஸ் செய்த நெப்போலியன்.! அனந்த கண்ணீரில் மனைவி.!

வெளியிட்டது

தனது மனைவியின் 50வது பிறந்தநாளை மிக பிரமாண்டமாக கொண்டாடி இருக்கிறார் நெப்போலியன். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெகு வேகமாக பரவி வருகிறது. தமிழில் ஒரு காலத்தில் கிராமத்து கதைகளை எடுத்து நடிப்பதில் கைதேர்ந்தவராக இருந்தவர் நடிகர் நெப்போலியன். இவர் முதன்முதலாக 1991 ஆம் ஆண்டு வெளியான “புது நெல்லு புது நாத்து” என்கிற படத்தின் மூலமாக அறிமுகமானார். பின்பு இவர் சீவலப்பேரி பாண்டி, கிழக்கு சீமையிலே போன்ற பல படங்களில் நடித்தார். மொத்தம் 70 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அவரது மூத்த மகன் தனுஷ் மாற்றுத்திறனாளி என்பதால் அவரின் சிகிச்சைக்காக அடிக்கடி அமெரிக்கா சென்று வந்த இவர் ஒரு கட்டத்தில் அமெரிக்காவிலேயே செட்டில் ஆகிவிட்டார். கடந்த 12 வருடங்களாக அமெரிக்காவில் வாழ்ந்து வரும் இவர், ஆறு வருடங்களுக்கு முன்பு ஒரு பிரம்மாண்டமான வீட்டை வாங்கி இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மனைவியின் 50வது பிறந்த நாள்.! வேற லெவல் சர்ப்ரைஸ் செய்த நெப்போலியன்.! அனந்த கண்ணீரில் மனைவி.! 1

அந்த வீட்டில் தனது மகன் தன்னால் நடக்க முடியவில்லை என்று ஏங்கி விடக்கூடாது என்பதற்காக வீட்டை பார்த்து பார்த்து வடிவமைத்து இருக்கிறார். அதிநவீன வசதிகளுடன் கூடிய படுக்கைகள், நீச்சல் குளத்திற்கு செல்வதற்கு தனியாக லிப்ட், வீட்டு மாடிகளுக்கு செல்வதற்கு தனியாக ப்ரோக்ராம் செய்யப்பட்ட லிப்ட் வசதிகள் என்று வீட்டை பார்த்து பார்த்து கட்டி இருக்கிறார். 12,000 சதுர அடியில் அந்த வீடு கட்டப்பட்டிருக்கிறது. அந்த வீட்டிற்குள்ளேயே தியேட்டர், பார் செட்டப், பாஸ்கெட் பால் கோர்ட், நீச்சல் குளம் கார்கள் நிறுத்துவதற்கு என்று தனி இடம், தோட்டம் என மிகப் பிரம்மாண்டமாக அமைந்திருந்தது அந்த வீடு. அந்த வீட்டை சுற்றி வருவதற்கே ஒரு நாள் தேவைப்படும் என்று அளவிற்கு அரண்மனை போல் தனது வீட்டை கட்டி இருக்கிறார் நெப்போலியன்.


தனது மனைவியின் 50வது பிறந்தநாளை மிக பிரமாண்டமாக கொண்டாடி இருக்கிறார் நெப்போலியன். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெகு வேகமாக பரவி வருகிறது. தனது மகன் 10 வயதில் இருக்கும் போது நடக்க முடியாது என்ற போது அன்று தொடங்கி இன்று வரை கவனித்து கொள்கிறார் என்றும், அவர் இல்லை என்றால் தான் இல்லை என்றும், திருமணத்திற்கு பிறகு MBA படித்து தன்னுடைய ஐடி நிறுவனத்தையும் கவனித்து கொள்கிறார் என்றும் பெருமையாக பேசி இருந்தார். இந்த நிலையில் இன்று அவரின் 50வது பிறந்தநாளை அமெரிக்காவில் சிறப்பாக கொண்டாடி இருக்கிறார் நெப்போலியன். அதற்கு food ரிவியூர் இர்பான் சென்று அதை வீடியோவாக பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவை நீங்களும் காண.! Watch the below Video.! 

Youtube Video Code Embed Credits: Irfan’s View

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்