ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்தவர் நடிகர் நெப்போலியன். மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை கொண்ட இவர் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்தார். ஹீரோவால் மட்டும் தான் ஹிட் கொடுக்க முடியும் என்று இல்லாமல் இவர் வில்லனாக நடித்த படங்களும் இவருக்கு மாபெரும் ஹிட்டாக அமைந்து இருக்கிறது. அப்படி சினிமாவை ஒரு காலகட்டத்தில் கலக்கி இருந்தார் நடிகர் நெப்போலியன். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நடிகராக மட்டும் இல்லாமல் அரசியலிலும் இணைந்து அமைச்சராகவும் பணியாற்றி இருந்தார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், அதில் தனுஷ் என்ற மகன் மாற்றுத்திறனாளி. தனது மகனுக்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய பாச தந்தை தான் நெப்போலியன். மகன் கேட்டதற்காக அமெரிக்காவில் தனது தொழிலை மாற்றி அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.
மேலும் தனது மகனுக்கு திருமண ஏற்பாடு செய்து உள்ளார். இந்நிலையில், மாற்றுத்திறனாளி நபருக்கு பெண்ணை திருமணம் செய்துவைத்து அவரது வாழ்க்கையை ஏன் கெடுக்குறீர்கள் என்பதை போல பேசி வந்தனர் நெட்டிசன்கள். தற்போது இதற்கு நெப்போலியன் மகன் தனுஷ் பதில் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பேசிய அவர், திருமணத்திற்கு வாழ்த்தியவர்களுக்கு நன்றி, சிலர் நெகட்டிவ் கருத்துக்களை கூறி வருகின்றனர். அந்த பேச்சுக்கள் தன்னை பாதிக்காது அவர்கள் முன்னாள் நான் வாழ்ந்து காட்டுவேன் என கூறி உள்ளார்.