
கடினமான நேரங்களிலும் ஒருவருடைய முகம் கொஞ்ச இன்முகத்தோடு இருக்கிறது என்றால், அவர் தன்னுள் இருக்கும் சோகங்களை முற்றிலுமாக தனக்குளேயே வைத்து மறைக்கப்பார்க்கிறார் என்பதே அர்த்தம். இதனை இப்பொது இங்கு பதிவு செய்ய காரணம் நடிகை மீனா. எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் தன்னுடைய சோகத்தை ஒருவன் மறைக்க பார்க்கிறான் என்றால் அவன் எப்பேர்ப்பட்ட பலசாலி என்பது அதிலிருந்து நாம் அறிந்துகொள்ள முடியும். அதே போல தான் நடிகை மீனாவும் இப்பொது தன்னை எவ்வளவு பலசாலி என்பதை காட்டியுள்ளார்.
நடிகை மீனா சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் நாயகியாகி இப்பொது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருபவர். 6 வயதில் நடிகர் திலகம் ஷிவ்ஜி கணேசன் நடிப்பில் வெளியான “நெஞ்சங்கள்” படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தன்னுடைய 14 வயதில் நாயகியாக அறிமுகமான இவர் அதன் பின் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழி 150க்கும் மேற்பட்ட படங்களில் நாயகியாக நடித்துள்ளார். ரஜினியுடன் “முத்து” படம் நடித்து தமிழகம் மட்டுமின்றி ஜப்பானிலும் மிக பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார். கமலுடன் “அவ்வை ஷண்முகி”, சரத்குமாருடன் “நாட்டாமை”, விஜயகாந்துடன் “சேதுபதி IPS”, அஜித்துடன் “சிட்டிசன்” என 1990ஆம் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் இணைத்து படம் நடித்துள்ளார். குறிப்பாக பலவும் மெகா ஹிட் அடித்தவை.
நுரையீரல் பாதிப்பு காரணமாக மீனாவின் கணவர் வித்யாசாகர் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 48 ஆகும். திரையுலக பிரபலங்களும், நட்சத்திரங்களும் பலரும் நடிகை மீனாவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிவருகிறார்கள். அந்த வகையில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் இன்று மீனாவின் வீட்டிற்கு நேரில் சென்று அவருக்கு ஆறுதல் கூறினார். அப்போது மீனாவுக்கு ஆதரவாக டான்ஸ் மாஸ்டர் கலா அவர்களும் உடன் இருந்தார். அந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகின.
இதை பார்த்து பலர் மீனாவிற்கு ஆறுதல் கூறி வந்தாலும் ஒரு சிலர் அந்த புகைப்படத்தில் மீனா காலணி அணிந்து இருக்கிறார் என்றும், கணவர் இறந்த நிலையில் எப்படி சிரிக்கிறார் என்றும் கேவலமாக கமன்ட் செய்து வருகின்றனர். சில முட்டாள் தனமான சமூக வழிதலைவாசிகளின் இந்த முட்டாள் தனமான கமென்டிற்கு ரசிகர்கள் பலரும் கழுவி ஊற்றி வருகிறார்கள்.