விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரில் மைனா என்ற கதாபாத்திரம் மூலமாக அறிமுகமானவர் நந்தினி. இவரை நந்தினி என்று கூறுவதை விட மைனா என்று கூறினால்தான் அனைவருக்கும் தெரியும். திரையுலகிலும் சரி, சின்னத்திரையிலும் சரி, பெண் காமெடியாளர்கள் மிகவும் குறைவு. அப்படியே அவர்கள் வந்தாலும் மிகவும் கஷ்டப்பட்டு வரவேண்டிய சூழ்நிலை இருக்கிறது. ஆனால் தனது எதார்த்தமான காமெடியால் பலரையும் சிரிக்க வைத்து கொண்டிருப்பவர் மைனா. இவர் சினிமாவில் பல வாய்ப்புகள் தேடியும் கிடைக்காத காரணத்தினால் சின்னத்திரைக்குள் நுழைந்தார். சரவணன் மீனாட்சி சீரியலில் மைனா கதாபாத்திரத்தை சிறப்பாக செய்ததால் அவருக்கு அடுத்தடுத்த நாடகங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது. மேலும் சில படங்களில் நடிக்கும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்து வருகிறது. விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராகவும் அவர் நடித்துள்ளார்.

தற்போது வெளியான விருமன் படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இவருக்கு முதலில் ஒருவருடன் திருமணம் நடைபெற்றது. அந்த கணவர் தற்கொலை செய்து கொண்டு இறந்ததால் இவர் இரண்டாவதாக யோகி என்ற ஒருவரை திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். இவருக்கு ஒரு மகனும் இருக்கிறார். மைனாவும், அவரது கணவர் யோகியும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்கு பெற்ற பின்னர் மிகவும் பிரபலமாகினர். சின்னத்திரையில் மக்களுக்கு பிடித்த ஜோடியாகவும் மாறிப் போயினர். சமூக வலைதளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் மைனா ஒரு யூடியூப் சேனலையும் தொடங்கி அப்போது வீடியோக்களை பதிவேற்றி வருகிறார். மேலும் கணவருடன் இணைந்து இவர் instagram ரீல்ஸ் செய்து அவ்வபோது பதிவேற்றி வருகிறார். இவருடைய வீடியோக்களை பல லட்சம் மக்கள் பார்ப்பது உண்டு.
இந்த நிலையில் மைனாவின் கணவர் யோகியை நெட்டிசன்கள் திட்டி தீர்த்து வந்தனர். இதன் பின்புலம் குறித்து ஆராய்ந்த போது யோகி முதலில் ரம்மி சர்க்கிள் விளம்பரத்தில் நடித்து இருந்தார். அது தற்போது இன்ஸ்டாகிராமில் பலருக்கும் விளம்பமரமாக ஒளிபரப்பாகியுள்ளது. இதை பார்த்த இணையவாசிகள், இது தற்போது நடந்தது என்று நினைத்துக் கொண்டு யோகியை திட்டி தீர்த்து வருகின்றனர். காசுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வீர்களா? என்று கமெண்டில் கழுவி ஊற்றத் தொடங்கிவிட்டனர். ஆனால் உண்மையில் யோகி நடித்த அந்த விளம்பரம் மிகப் பழையது.