கெளதம் கார்த்திக்கும் மஞ்சிமா மோகனுக்கும் நிச்சயம் முடிந்து விட்டதா? தீயாய் பரவும் புகைப்படம்

கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இவர்களின் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் ஒரு புகைப்படம் தீயாக பரவி வருகிறது. நவரச நாயகன் கார்த்திக்கின் மகன்தான் நடிகர் கௌதம் கார்த்திக். இவர் கடல் என்ற படத்தில் மூலமாக திரைத்துறையில் அறிமுகமானார. முதல் படமே மணிரத்தினம் படத்தில் நடித்த பிரபலமானார். பின்னர் இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்தார். ஆனால் இவருக்கு எந்த படங்களும் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை.சமீபத்தில் இவர் ஆனந்தம் விளையாடும் வீடு என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் சிம்புவுடன் இணைந்து பத்து தல படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவர் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

கெளதம் கார்த்திக்கும் மஞ்சிமா மோகனுக்கும் நிச்சயம் முடிந்து விட்டதா? தீயாய் பரவும் புகைப்படம் 1

விளம்பரம்

இந்த நிலையில் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இருவரும் காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல் பரவியது. சமீபத்தில் கௌதம் கார்த்திக் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு கேள்வி பதிலை நடத்தி இருந்தார்., அப்பொழுது ஒரு ரசிகர் உங்களுக்கு எப்பொழுது திருமணம் என்று கேட்டிருந்தார் அப்போது விரைவில் நடக்கும் என்று கூறியிருக்கிறார். தேவராட்டம் என்னும் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது கௌதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன் இருக்கும் காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருவரும் இரண்டு வருடங்களுக்கு மேலாக காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறப்பட்டது.

தொடர்புடையவை  என் உடம்பு சிலிர்க்கிறது.! காந்தரா படத்தை பார்த்துவிட்டு மனதார வாழ்த்திய ரஜினிகாந்த்.!

கெளதம் கார்த்திக்கும் மஞ்சிமா மோகனுக்கும் நிச்சயம் முடிந்து விட்டதா? தீயாய் பரவும் புகைப்படம் 3

விளம்பரம்

ஆனால் இருவரும் தங்களது காதல் குறித்து அதிகாரப்பூர்வமாக எந்தவித கருத்தையும் வெளியிடாமல் இருந்து வந்தனர். இந்த நிலையில் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சுமா மோகன் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது என ஒரு புகைப்படம் வைரலாகி இருக்கிறது. இந்த புகைப்படத்தின் உண்மை தன்மை குறித்து விசாரித்த போது அlதனது நண்பர் ஒருவரின் நிச்சயதார்த்தத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் எனவும், இருவருக்கும் இன்னும் திருமணம் நிச்சயதார்த்தமோ நடைபெறவில்லை என்றும், ஆனால் இருவர் வீட்டிலும் இவர்கள் காதலுக்கு ஓகே சொல்லிவிட்டதால் இந்த வருட இறுதியில் திருமணம் நடைபெறும் என்றும் தெரியவந்துள்ளது. மேலும் கௌதம் மற்றும் மஞ்சுமா மோகனின் நிச்சயதார்த்தம் கார்த்திக்கின் பண்ணை வீட்டில் நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.

கெளதம் கார்த்திக்கும் மஞ்சிமா மோகனுக்கும் நிச்சயம் முடிந்து விட்டதா? தீயாய் பரவும் புகைப்படம் 5

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment