நீயா நானா நிகழ்ச்சி, ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு தலைப்புடன் புது விதமாக நிகழ்ச்சியை வெற்றிகரமாக பல வருடங்களாக கொண்டு செல்கிறது. கிட்டத்தட்ட 15 ஆண்டுகளை கடந்து இன்றும் வார வாரம் மக்கள் விரும்பி பார்க்கும் ஒரு நிகழ்ச்சியாக இது இருந்து வருகிறது. இதன் மூலமே திரு.கோபிநாத் அவர்கள் மிக பெரிய அறிமுகத்தை பெற்று இன்று சமூகத்தில் நல்ல வழிகாட்டியாக, பேச்சாளராக உள்ளார்.

இந்த நிகழ்ச்சி பேசாத விஷயங்களே இல்லை என கூறலாம். அரசியல், விளையாட்டு, சினிமா, மருத்துவம், ஆன்மீகம், அமானுஷ்யம், குழந்தைகள் உலகம், முதியோர் முதல் குடும்பம் வரை, காதல் முதல் கலயாணம் வரை அனைத்தையும் பேசிவிட்டது இந்த நிகழ்ச்சி. இருப்பினும் ஒவ்வொரு வாரமும் ஒரு புது தலைப்பை கொண்டு வந்துகொண்டே இருக்கிறது.
இந்த வாரம் பிரபலங்கள் மற்றும் அவர்களுடைய குடும்பங்கள் என்ற தலைப்பில் விவாதித்தது. பிரபலமாக இருக்கும் மனைவிமார்கள் ஒரு பக்கமும், அவர்களுடைய குடும்பங்கள் ஒரு புறமும் அமர்ந்து விவாதித்தனர். இதில் பலர் கலந்து கொண்டனர். விஜய் டிவி புகழ் அறந்தாங்கி நிஷாவும் இதில் கலந்து கொள்ள, அவருடைய கணவர் குடும்பம் சார்பில் கலந்து கொண்டார்.
முதலில் பேசிய நிஷாவின் கணவர் ரியாஸ் அலி, “நிஷா வெளியில் உள்ளது போல, வீட்டில் இருப்பதில்லை, எப்போது வெளியில் அனைவரையும் சிரிக்க வைக்கும் அவர், வீட்டில் என்னுடன் கூட சிறுது நேரம் சிரித்து பேசுவதில்லை. எப்போதும் எதோ ஒன்றை குறித்து யோசித்து கொண்டே இருக்கிறார். சாப்பிட்டாச்சா என்று கேட்டால் கூட 15 நிமிடங்கள் கழித்து தான் பதில் வரும், அந்த அளவிற்கு எதோ ஒரு யோசனையில் எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறார்.
இதை கேட்டுக்கொண்டிருந்த நிஷா சற்று அழுத்துவிட்டார். பின்னர் சுதாரித்து கொண்டு பேசிய அவர், ” வெளியில் ஜாலியாக இருப்பது என்னுடைய தொழில், அதற்காக பல தரப்பட்ட அவுமானங்களையும், திட்டுகளையும் எதிர்கொள்கிறேன், ரொம்ப கஷ்டபடுத்துற மாதிரி பேசுறாங்க, தாங்கிக்க முடியாம, யோசித்து கொண்டே இருப்பேன், இன்னும்கூட அதையெல்லாம் தாண்டி வரமுடியாமல் தவித்து வருகிறேன்” என நெகிழ்ச்சியாக கூறினார்.
உண்மையில் போது வெளியில் இருக்கும் பலரும் இதனை எதிர்கொண்டு தான் வருகிறார்கள். குறிப்பாக பெண்கள் பலரும் தங்கள் தினம் தினம் வாழ்க்கையில், இது போன்ற இன்னல்களை சந்திக்க தான் வேண்டி இருக்கிறது.
Video Courtesy – IndiaGlitz