“கேக்கவே மெர்சலா இருக்கே”!!சூர்யாவை தொடர்ந்து விஜயும் அப்படி நடிக்கவுள்ளாரா?!!இயக்குனர் லோகேஷ் கனகராஜால் அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள்!!

அண்மையில் வெளியான லோகேஷின் “விக்ரம்” படமே இப்பொது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், சூரியா, நரேன் என பலர் நடித்துள்ள இந்த படம் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களின் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது மட்டுமின்றி விமர்சன ரீதியாகவும் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது.

"கேக்கவே மெர்சலா இருக்கே"!!சூர்யாவை தொடர்ந்து விஜயும் அப்படி நடிக்கவுள்ளாரா?!!இயக்குனர் லோகேஷ் கனகராஜால் அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள்!! 1

விளம்பரம்

குறிப்பாக இயக்குனர் லோகேஷின் திறமையான டைரெக்ஷன் மற்றும் கதையமைப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னர் வெளியான லோகேஷின் “கைதி” படத்துடன் தொடர்புடன் இந்த விக்ரம் படம் முழுக்க பயணிக்கிறது. அந்த படத்தில் வரும் கதாபாத்திரங்களை அழகாக இந்த படத்தினுள் புகுந்தி, இயக்குனர் லோகேஷ் தன்னுடைய கதை வடிவமைப்பில் அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளார்.

"கேக்கவே மெர்சலா இருக்கே"!!சூர்யாவை தொடர்ந்து விஜயும் அப்படி நடிக்கவுள்ளாரா?!!இயக்குனர் லோகேஷ் கனகராஜால் அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள்!! 3

விளம்பரம்

விக்ரம் படத்தில் வரும் சூர்யா, கடைசியில் வந்து அடுத்து வரவிற்கும் கைதி 2 படத்திற்கும், விக்ரம் 3 படத்திற்குமான முடிச்சை வலுவாக போட்டுள்ளார். இதனால் இது தமிழ் சினிமாவில் ஒரு புதிய முயற்சியாக பார்க்கப்பட்டு, அனைவராலும் பாராட்டப்படுகிறது. அது மட்டுமின்றி படத்திற்கும் இது மிக பெரிய பலமாக உள்ளது. சிறப்பு தோற்றத்தில் வரும் சூர்யாவையும் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

தொடர்புடையவை  தொப்புள் கொடி விவகாரம்..! மன்னிப்பு கேட்ட இர்பான்..!

இப்பொது இதே பாணியை கையில் எடுத்துள்ளார் நமது அட்லீ. தமிழில் தொடர்நது 4 மிக பெரிய வெற்றி படங்களை கொடுத்துள்ள அவர், பாலிவுட் மெகாஸ்டார் ஷாருக் கானுடன் இணைத்து “ஜவான்” என்ற பான் இந்திய படத்தை இயக்கி வருகிறார். இதில் நயன்தாரா, யோகிபாபு முதலானோர் நடித்து வருகிறார்கள்.

விளம்பரம்

"கேக்கவே மெர்சலா இருக்கே"!!சூர்யாவை தொடர்ந்து விஜயும் அப்படி நடிக்கவுள்ளாரா?!!இயக்குனர் லோகேஷ் கனகராஜால் அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள்!! 5

படம் அடுத்த வருடம் வெளியாகும் என அறிவிக்கபட்டுள்ள நிலையில், படத்திற்கு தென்தமிழகத்தில் மிக பெரிய வகையில் வலு சேர்க்க இயக்குனர் அட்லீ இப்போது ஒரு முடிவு எடுத்துள்ளாராம். அது அவருடன் 3 படங்களில் பணியாற்றிய தளபதி விஜயை இந்த ஜவான் படத்தில் ஒரு முக்கிய சிறப்பு தோற்றத்தில் நடிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார் என கூறப்படுகிறது.

விளம்பரம்

உண்மையில் இயக்குனர் அட்லீக்கும் நடிகர் விஜய்க்கும் நல்ல நட்பு உள்ளது. அதே போல ஷாருக் கான், அண்மைக்காலங்களில் விஜயுட நெருங்கிய வட்டாரத்தில் உள்ளார். வெளியான “பீஸ்ட்” [இடத்திற்கு கூட தன்னுடைய வாழ்த்தை இவர் இயக்குனர் அட்லீயுடன் பகிர்ந்து கொண்டார். இவ்வாறு இருக்க, அட்லீ அழைத்ததற்கு விஜய் மதிப்பளித்து, ஒப்புக்கொண்டால் இந்திய சினிமாவின் மிக முக்கிய நடிகர்கள் விஜய் மற்றும் ஷாருக்கானை ஓர் திரையில் காணும் வாய்ப்பு ரசிகர்களுக்கு கிட்டும்.

தொடர்புடையவை  அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் இணைத்து நடித்துள்ள முதல் படம்.! 'Blue Star' First Single இதோ

"கேக்கவே மெர்சலா இருக்கே"!!சூர்யாவை தொடர்ந்து விஜயும் அப்படி நடிக்கவுள்ளாரா?!!இயக்குனர் லோகேஷ் கனகராஜால் அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள்!! 7

விளம்பரம்

ஆனால் இது நடக்குமா? அட்லீ உண்மையில் விஜயிடம் இது போன்ற ஒரு கோரிக்கையை வெய்துள்ளாரா? விஜய் அதற்கு ஒப்புக்கொள்வாரா? என்பது எல்லாம் இனி வரும் காலங்களில் தான் தெரியும்.

விளம்பரம்

Leave a Comment