நடிகை நயன்தாராவுக்கும் மாளவிகா மோகனனுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளதாக தகவல் பரவி வந்த நிலையில், அது குறித்து தற்போது மாளவிகா மோகனன் விளக்கம் அளித்திருக்கிறார். தமிழில் பேட்ட, மாஸ்டர், மாறன் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன். இவர் சமீபத்தில் ஒரு பேட்டியின்போது நயன்தாராவின் பெயரை குறிப்பிடாமல், அவரைப் பற்றி சில விமர்சனங்களை கூறியிருந்தார். அது இணையதளத்தில் மிக வைரலானது. ஒரு நடிகை மருத்துவமனையில் இருக்கும் காட்சியில் கூட முழு மேக்கப் உடன் நடித்திருக்கிறார் என்று நயன்தாராவை மறைமுகமாக குற்றம் சாட்டியிருந்தார் மாளவிகா. இது குறித்து பதிலடி கொடுத்திருந்த நயன்தாரா எனது இயக்குனர் என்ன சொல்கிறாரோ அதைத்தான் செய்ய முடியும். கமர்சியல் படங்களுக்கும் எதார்த்தமான படங்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது இது கமர்சியல் படத்தில் எடுக்கப்பட்ட காட்சி. மருத்துவமனையில் இருப்பதற்காக முடியை விரித்து போட்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று பதிலடி கொடுத்திருந்தார்.

மேலும் தான் எது செய்தாலும் அதில் சிலர் குறை கூறிக்கொண்டே தான் இருக்கிறார்கள். உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறினால் என்ன இப்படி ஒல்லி ஆகிவிட்டீர்கள் என்கிறார்கள், உடல் எடை அதிகமாகி விட்டால் என்ன இப்படி குண்டாகிவிட்டீர்கள் என்கிறார்கள், விமர்சனம் சொல்பவர்கள் விமர்சனம் சொல்லிக் கொண்டே தான் இருப்பார்கள் என்று நயன்தாராவும் மாளவிகா பெயரை குறிப்பிடாமல் பதிலடி கொடுத்திருந்தார். இந்த நிலையில் மாளவிகா கிறிஸ்டி என்கிற படத்தில் நடித்திருக்கிறார். அது குறித்த பேட்டி ஒன்றில் பங்கேற்ற மாளவிகா, லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து சில கருத்துக்களை கூறினார். அதில் நடிகைகளை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்க தேவையில்லை. அவர்களை சூப்பர் ஸ்டார் என்று மட்டும் அழைக்கலாம். கத்ரீனா கைஃப், ஆலியா பட், தீபிகா படுகோன் ஆகியோரை சூப்பர் ஸ்டார் என்று அழைத்தாலே போதும் என கூறியிருந்தார். அவரது பேட்டியை பார்த்த நெட்டிசன்கள் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை தான் இவர் மறைமுகமாக தாக்கி பேசி இருப்பதாக இணையத்தில் கருத்து தெரிவித்து வந்தனர்.

இதுகுறித்து பல ஊடகங்களும் செய்தி வெளியிட்டு வந்த நிலையில், தற்போது மாளவிகா மோகனன் இந்த சர்ச்சை குறித்து ட்விட்டரில் விளக்கம் அளித்து இருக்கிறார். அதில் அவர் பெண் நடிகைகள் குறித்து நான் சொன்ன கருத்து எந்த ஒரு தனிப்பட்ட நபரையும் குறித்து அல்ல, எந்த ஒரு தனிப்பட்ட நடிகையை குறித்தும் அல்ல. நான் உண்மையிலேயே நயன்தாரா மீது மிகுந்த மதிப்பு மரியாதையும் வைத்திருக்கிறேன். ஒரு சீனியராக அவரின் அயராத உழைப்பை மற்றும் பயணத்தையும் நான் வியந்து பார்க்கிறேன். நீங்கள் எல்லாம் கொஞ்சம் அமைதியாக இருங்கள். எப்போதும் நயனுக்கு என்னுடைய அன்பு உண்டு என்று ஹார்டின் எமோஜி உடன் அவர் அந்த பதிவை பகிர்ந்து இருக்கிறார். இதன் மூலமாக நயன்தாரா குறித்த சர்ச்சைக்கு மாளவிகா மோகன் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
Youtube Video Embed Code Credits : Red Malayalam