திருமணம் ஆகாமலேயே இரு நடிகைகள் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருப்பது தற்போது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மலையாள உலகின் முன்னணி நடிகைகளாக இருப்பவர்கள் நித்யா மேனன் மற்றும் பார்வதி நாயர். இவர்கள் இருவரும் தற்போது தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கர்ப்பமாக இருக்கிறார்கள் இல்லையா? என்பது குறித்து அறியும் கருவியின் புகைப்படத்தை பதிவிட்டு ஆச்சரியங்கள் தொடங்குகிறது என்று பகிர்ந்து இருப்பது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது. கேரளாவை சேர்ந்த நித்யா மேனன் மணிப்பால் பல்கலைக்கழகத்தில் இதழியல் படித்திருக்கிறார். பத்திரிக்கையாளராக விரும்ப அவர் பின்பு புனேவில் உள்ள திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவாளர் படிப்பை முடித்தார்.

பின்பு படங்களில் நடிக்கும் ஆர்வம் காரணமாக படங்களில் நடித்து வருகிறார். தமிழில் வெப்பம், மெர்சல், ஓ காதல் கண்மணி, காஞ்சனா 2, சைக்கோ போன்ற பல வெற்றி படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக அவர் நடிப்பில் வெளிவந்த திருச்சிற்றம்பலம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. இதில் ஷோபனா கதாபாத்திரத்தில் அனைவரையும் கவர்ந்திருந்தார் நித்யா மேனன். அதேபோல பார்வதி நாயர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருப்பவர். இவர் தமிழில் வெளியான பூ என்ற படத்தில் மூலமாக அறிமுகமானார். மேலும் மரியான், பெங்களூர் டேஸ் போன்ற படங்களில் நடித்து மக்களின் மனங்களில் இடம் பிடித்தார்.
இந்த நிலையில் instagram பக்கத்தில் பார்வதி நாயரும், நித்யா மேனனும் கர்ப்பமாக இருப்பது போன்ற பிரக்னன்சி கிட் புகைப்படத்தை பகிர்ந்து புதிய ஆச்சரியங்கள் தொடங்குகின்றதாக பகிர்ந்திருந்தனர். இதை பார்த்த பலரும் இருவரையும் திருமணம் ஆகாமலே கர்ப்பம் ஆகி விட்டீர்களா என்று தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால் அவர்கள் ஒரு புதிய படத்தின் ப்ரோமோஷன்க்காகவே அந்த புகைப்படத்தை பகிர்ந்ததாக கூறப்படுகிறது. அவர்களின் ரசிகர்கள் கமெண்ட் போடுவதற்கு முன்பு என்ன விஷயம் என்பதை தெரிந்து கொண்டு கமெண்ட் செய்யுங்கள் இது நிஜமல்ல படத்தின் ப்ரோமோஷன் காக இப்படி பதிவிட்டு இருக்கிறார்கள் என்று மோசமாக திட்டி அவர்களுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.