இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இசையில் முதல் ஆல்பம் பாடலை பாடி இருக்கிறார் தாமரை செல்வி. மகனை நினைத்து உருகும் தாயாக கேட்பவர்களின் மனதை நெகிழ வைக்கும் விதமாக பாடி இருக்கிறார் தாமரை செல்வி.! இந்த பாடலுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது. பிக்பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் தாமரை செல்வி. இவர் சிறு வயது முதலே மிகவும் கஷ்டப்பட்டு வளர்ந்தார். இவரின் பெற்றோர்கள் இன்றளவும் குடிசையில் வசித்து வருகின்றனர். மூத்த பிள்ளை என்பதால் குடும்பத்தின் பாரத்தை சுமப்பதற்க்காக சிறு வயதிலேயே நாடக குழுவில் சேர்ந்தார் தாமரை. கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..!

அன்று தொடங்கி பிக்பாஸ் செல்வதற்கு முன்பு வரை நாடக குழுவின் பணியாற்றி வந்தார். பிக்பாஸ்க்கு பிறகு இவரது வாழ்க்கை சற்று மாறியது. பிக்பாஸ் சீசன் 5, பிக்பாஸ் அல்டிமேட், பிக்பாஸ் ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சிகள் ஆகிய அனைத்திலும் கலந்து கொண்டார். ஆனால் எந்த நிகழ்ச்சியிலும் வெற்றி பெற முடியவில்லை. இருந்தாலும் மனம் தளராமல் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டே வருகிறார் தாமரை. இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனுக்கு தாமரை மீது ஒரு கரிசனம் உண்டு. தாமரை சாதிக்க வேண்டும் என நினைக்கும் நபர்களில் ஜேம்ஸ் வசந்தனும் ஒருவர்.

தாமரை செல்வியின் தாயார் குடிசை வீட்டில் படும் கஷ்டங்களை பார்த்து அவருக்கு வீடு ஒன்றை கட்டி கொடுத்து வருகிறார் ஜேம்ஸ் வசந்தன். இந்த நிலையில் தாமரையை வைத்து ஒரு ஆல்பம் பாடலை இசையமைத்து இருக்கிறார். இந்த பாடலை தாமரை செல்வியே பாடி இருக்கிறார். காணாமல் போன சிறு வயது மகனை நினைத்து உருகும் ஒரு தாயாக அந்த பாடலை தாமரை செல்வி பாடி இருக்கிறார். கேட்பவர்கள் நெஞ்சை உருக வைக்கும் அந்த பாடலை நீங்களும் கேட்க.! Watch the below video..!
Youtube Video Code Embed Credits: James Vasanthan