பிக்பாஸில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கும் அசீம் எழுதிய கார்டு ஒன்றை காட்டி நெட்டிசன்கள் அசீமை மரணமாக கலாய்த்து வருகின்றனர். தனக்கு தமிழ் மிகவும் பிடிக்கும் என்று மார்தட்டி கொண்டு வரும் அசீம், டாஸ்கின் போது ஒரு கார்டில் எழுதிய எழுத்துக்களில் அவ்வளவு பிழையாக எழுதியிருக்கிறார் அந்த கார்டை ஸ்கிரீன் ஷாட் எடுத்து இதுதான் உங்கள் தமிழ் பிடித்திருக்கும் லட்சணமா என்று கலாய்த்து வருகின்றனர். பிக்பாஸ் சீசன் 6ல் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டவர்தான் அசீம். இவர் ஆரம்பத்தில் ஒரு தனியார் செய்தி தொலைக்காட்சியில் சினிமா செய்திகளை தொகுத்து வழங்கி வந்தார். பின்னர் இவருக்கு விஜய் டிவியில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. விஜய் டிவியில் ஷிவானி உடன் இணைந்து பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் போன்ற நாடகங்களில் நடித்து வந்தார்.

பின்னர் இவர் சன் டிவியில் ஒளிபரப்பான பூவே உனக்காக சீரியலிலும் ஹீரோவாக நடித்து வந்தார். இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 6ல் கலந்து கொண்டுள்ளார். ஆரம்பம் முதலே தொடர்ந்து சண்டை, சச்சரவு என இருந்து வருகிறார். சகப் போட்டியாளர்களை மரியாதை இல்லாமல் ஒருமையில் பேசுவது, திட்டுவது என்று ஏதாவது ஒரு பிரச்சனையில் மாட்டிக்கொண்டே இருக்கிறார். கடந்த வாரம் கூட விக்ரமன் சாப்பாட்டில் காறித்துப்பிக் கொடுப்பேன் அதை சாப்பிடு என்று வார்த்தைகளை விட்டு கமலிடம் வாங்கி கட்டிக் கொண்டார். இந்த வாரம் பிக்பாஸில் நடக்கும் நீதிமன்றம் டாஸ்க்கில் அசீம் எழுதிய ஒரு கார்டு தற்போது வைரலாகி இருக்கிறது. தனக்கு தமிழ் மிகவும் பிடிக்கும், தன்னைப்போல் யாராலும் தமிழ் பேச முடியாது என்றெல்லாம் சுய புகழ்ச்சி செய்து கொள்ளும் அசீம் தப்பு தப்பாக தமிழை எழுதி இருக்கிறார்.


அவர் பேசும்போது வழக்கறிஞர் என்பதற்கு பதிலாக “வழக்கறிஞ்சர்” என்றும் கலைஞர் என்று சொல்லுக்கு பதிலாக “கலைஞ்சர்” என்றும் பயன்படுத்தி வருகிறார். தற்போது நீதிமன்றம் டாஸ்க்கில் வழக்கை எழுதி இருக்கும் அவர் காழ்ப்புணர்ச்சி என்ற சொல்லுக்கு “கால்புணர்ச்சி” என்றும், கையில் விளங்கு மாட்டினார்கள் என்பதில் விலங்கு என்றும், சொன்னார் என்பதற்கு பதில் “சென்னார்” என்றும், அபாண்டமாக என்பதற்கு பதில் அபான்டமாக என்று தப்பு தப்பாக தமிழை எழுதி இருக்கிறார். அந்தக் காட்சிகளை ஸ்கிரீன் ஷாட் எடுத்த நெட்டிசன்கள் தமிழ் புலவரின் தமிழ் புலமையை கொஞ்சம் பாருங்கள் என்று பதிவிட்டு வருகின்றனர். மேலும் ஒரு இடத்தில் பேசும் பொழுது சந்தர்ப்பம் என்ற வார்த்தைக்கு பதிலாக சங்கல்பம் என்று கூறி வருகிறார். சங்கல்பம் என்பதிற்கும் சந்தர்ப்பத்திற்கும் வித்தியாசம் தெரியாத கோமாளி அசீம் என்றும் நெட்டிசன்கள் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.
Arei half boil
சங்கல்பம் means mudivu
Santharppam means opportunity / circumstance
சங்கல்பம் is not equal to santharppamTamil-ah saavadikiraare indha half boil 😭🫠😭😭#BiggBossTamil #BiggBossTamil6 pic.twitter.com/K6i143TZ08
— Raja (@whyrajawhy) November 23, 2022
ஒரு சென்சிட்டிவ் விடயத்தை எடுத்து ஜனனியை பகடைகாயாக்கி இன்றே விக்ரமை வீழ்த்த வேண்டும். ஏனெனில் BB title #Clownazeem வாங்க அவன் தடையாக நினைப்பது #Vikraman தான். இவன் #Ram #Robert #Queency #Janany போன்றோரை ஒரு ஆளாக கூட மதிக்கவில்லை. இது தெரியாமல் இந்த அயோக்கிய பய அசீம்க்கு 🔥🔥🔥 https://t.co/LKUs60LCIs
— தமிழ்தேயன் (@Tamildeyam) November 24, 2022
டேய் டேய் நீ சொல்லுறதுல எதாவது ஒண்ணாவது சரியா இருக்கா டா ? எதாவது பேசி விக்ரமன target பண்ணனும்னு நெனச்சு செவுத்துல போய் ஒவ்வொரு தடவையும் முட்டியும் திருந்த மாட்டியா நீ
🤡🤡🤡#Azeem #Janany #Vikraman #BiggBossTamil #BiggBossTamil6 #AzeemClown pic.twitter.com/p1OsJGkCVY— Anirudh Nagan (@anirudh_228) November 24, 2022