Categories: சினிமா

ஒரு சின்ன பையன் என்ன ஏமாத்திட்டான்..! குமுறும் நடிகை நிவேதா பெத்துராஜ்..!

வெளியிட்டது

தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வருபவர் நிவேதா பெத்துராஜ். தமிழ்நாட்டை சேர்ந்த பெண்ணான இவர் ஒரு நாள் கூத்து படத்தில் நடித்து சினிமாவுக்குள் அறிமுகம் ஆகினார். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது. இப்படத்தினை தொடர்ந்து இவர் பொதுவாக எம் மனசு தங்கம், டிக்டிக்டிக் படங்களில் நடித்து உள்ளார். தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் படங்கள் நடித்துள்ளார்.

ஒரு சின்ன பையன் என்ன ஏமாத்திட்டான்..! குமுறும் நடிகை நிவேதா பெத்துராஜ்..! 1

பின்னர் சரியான சினிமா வாய்ப்புகள் இல்லாததால் தனக்கான வாய்ப்பிற்கு காத்துகொண்டு இருக்கிறார்.இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் பொன் மாணிக்கவேல். இப்படத்தை தொடர்ந்து இவர் படங்கள் நடிப்பதில் இருந்து விலகி தனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேடி வருகிறார். மேலும் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இவர் தற்போது சென்னை சிக்னல் ஒன்றில் சிறுவன் தன்னிடம் புக் விற்பனை செய்து ஏமாற்றிவிட்டதாக புலம்பி உள்ளார். இதுகுறித்து அவர், நான் சிக்னலில் நின்று கொண்டு இருக்கும் பொழுது, சிறுவன் என்னிடம் வந்து புக் 50 ரூபாய் வேண்டுமா என்று கேட்டான், அதற்கு நான் அவனிடம் வாங்க நூறு ரூபாயை எடுத்த நிலையில், அவன் 500 ரூபாய் கொடுங்க என்று என்னிடம் கேட்டான், நான் புக் வேண்டாம் என கூறி அவனிடம் இருந்து 100 ரூபாயை திரும்ப வாங்கினேன். ஆனால், அவன் புக்கை தூக்கி காருக்குள் எரிந்து விட்டு என்னிடம் இருந்து 100ரூபாயை பிடிங்கி ஓடிவிட்டதாக கூறி உள்ளார்.

வெளியிட்டது

புதிய செய்திகள்