“நான் அதெல்லாம் யோசிக்கவே இல்ல.! எல்லாரும் என்ன மன்னிச்சிடுங்க.!” நிக்சன் எழுதிய கடிதம்.!

வெளியிட்டது

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் நிக்சன் தற்போது உருக்கமான கடிதம் ஒன்றை தனது ரசிகர்களுக்காக எழுதியிருக்கிறார். அந்த கடிதத்திற்கு பலரும் லைக்குகளை குவித்து வருகின்றனர். பிக்பாஸ் சீசன் 7ல் முக்கிய போட்டியாளராக இருந்தவர் நிக்சன். ராப் பாடகராக இருந்த இவருக்கு பிக் பாஸ் ஒரு வாய்ப்பை கொடுத்திருந்தது. 91 நாட்கள் சிறப்பாக விளையாடி வந்த நிக்சன் கடந்த வாரம் இரட்டை வெளியேற்றத்தில் வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்தபோது பெண்களுடன் அதிகமாக பேசுவது, அளவுக்கு மீறி தொடுவது, கட்டிப்பிடிப்பது என்று அவப்பெயரை பெற்று இருந்தார். இதுவே நிக்சனின் வெளியேற்றத்திற்கு முக்கிய காரணமாகவும் அமைந்திருந்தது.

"நான் அதெல்லாம் யோசிக்கவே இல்ல.! எல்லாரும் என்ன மன்னிச்சிடுங்க.!" நிக்சன் எழுதிய கடிதம்.! 1
இந்த நிலையில் பிக் பாஸில் இருந்து வெளியேறிய பின்னர் அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். அதில், “இப்போதுதான் எல்லாத்தையும் பார்த்தேன், எதிர்பாக்காத எல்லாத்தையும் எதிர்பார்த்தது என்ன ஃபீல். எவ்வளவு சப்போர்ட்? எவ்வளவு லவ்? எவ்வளவு பேருக்கு என்ன புடிச்சிருக்குன்னு உள்ள இருந்த வரைக்கும் எனக்கு தெரியல, ஒரு வேலை தெரிஞ்சிருந்தா இன்னும் எஃபர்ட் போட்டு இருப்பேனோ? அதெல்லாம் யோசிக்கவே இல்ல, சாரி..! உள்ள கப்ப ஜெயிக்கணும்னு போகல, என்ன நல்லவனாக காட்டிக்கணும்னு போகல, இந்த வீடு தந்த அனுபவம் மற்றும் ஆண்டவர் கொடுத்த பாடம் மூலமா மனதளவில் நல்ல டியூன் ஆயிருக்கேன்.

என்கிட்ட இருக்க நல்ல விஷயங்களை பாராட்டின எல்லாருக்கும் ரொம்ப நன்றி. என்கிட்ட இருந்த குறைய சுட்டி காட்டுன, சுட்டிக்காட்டிட்டு இருக்க எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி. நல்ல விஷயங்களை வளர்த்துக்கிறேன். கெட்ட விஷயங்கள மாத்திக்கிறேன். அவ்வளவு ஸ்டார்ஸ் நடுவுல யாருன்னே தெரியாத எனக்கு சப்போர்ட் பண்ண எல்லாருக்கும், இந்த வாய்ப்புன்ற வாழ்க்கையை கொடுத்த எல்லாருக்கும் நன்றின்னு வார்த்தைல சொன்னா பத்தாது. வேலையில காட்டுறேன்” என பதிவிட்டு இருக்கிறார்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்