நிமிடத்திற்கு நிமிடம் உயரும் பணத்தொகை.! எடுத்துக்கொண்டு வெளியேறப்போவது யார்.? பிக்பாஸ் ப்ரோமோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைக்கான ப்ரோமோக்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி வருகிறது. விறுவிறுப்புக்கு சிறிதும் பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வரும் ஒரு ரியாலிட்டி ஷோ தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 93 நாட்களைக் கடந்து தற்போது நிறைவடையும் தருவாயில் இருக்கிறது. இதில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்கிற பரபரப்புடன் இந்த நிகழ்ச்சி தற்போது நடந்து வருகிறது. 23 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே விளையாடி வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிமிடத்திற்கு நிமிடம் உயரும் பணத்தொகை.! எடுத்துக்கொண்டு வெளியேறப்போவது யார்.? பிக்பாஸ் ப்ரோமோ 1

விளம்பரம்

இதில் பலரும் எதிர்பார்ப்பு காத்திருந்த பணப்பெட்டி டாஸ்க் வைக்கப்பட்டிருக்கிறது. நிமிடத்திற்கு நிமிடம் பணத்தின் மதிப்பு ஏறிக்கொண்டே சென்று கொண்டிருக்கிறது. இதனால் யார் பணத்தை எடுக்க போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. ஒரு லட்சத்துடன் இந்தப் பணம் பெட்டி வைக்கப்பட்டு பின்னர் அது 5 லட்சமாக மாற்றப்பட்டிருக்கிறது. ஆனாலும் தற்போது வரை யாரும் பணத்தை எடுப்பதாக தெரியவில்லை. அதிகபட்சமாக விஜய் வர்மா அல்லது மணி இருவரில் ஒருவர் இந்த பெட்டியை எடுத்துக் கொண்டே வெளியேறி விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடையவை  SPB மகளை பார்த்து இருக்கீங்களா? முதல் முறையாக சூப்பர் சிங்கர் மேடைக்கு வந்த SPB மகள் பல்லவி.!

நிமிடத்திற்கு நிமிடம் உயரும் பணத்தொகை.! எடுத்துக்கொண்டு வெளியேறப்போவது யார்.? பிக்பாஸ் ப்ரோமோ 3
இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஹவுஸ் மேட்ஸ் ஒவ்வொருவராக எழுந்து இன்னொரு நபரை தேர்ந்தெடுத்து அவர்களின் பிக் பாஸ் பயணத்தை விளக்கிக் கூறுமாறு கூறப்படுகிறது. பூர்ணிமா விஷ்ணுவைப் பார்த்து என்னை பயன்படுத்திக் கொண்டு பின்னர் கசக்கி தூக்கி எறிந்து விட்டார் என்று கூறுகிறார். பின்னர் மாயாவுக்கும் விஷ்ணுவிற்கும் சண்டை வருகிறது. அப்பொழுது விஷ்ணு மாயாவை பார்த்து “நீயெல்லாம் ஜீரோ” என்று சொல்லி திட்டுகிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment