தற்போது உள்ள பொருளாதார மந்த நிலையில் இருந்து இந்தியா என்பதற்கான அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை என சர்வதேச நாணய நிதியத்தின் முத்த பொருளாதார அறிஞர் கீதா கோபிநாத் தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6 சதவீதத்தை தாண்டும் என சர்வதேச நாணய நிதியம் கணக்கிட்டது. ஆனால் இதுகுறித்து கடந்த வாரம் கருத்து தெரிவித்த கீதா கோபிநாத், வரும் ஜனவரியில் இந்த வளர்ச்சி விகிதம் மாற்றப்படும் எனவும் இந்த மாற்றம் நிச்சயமாக அறிவிக்கப்பட்டதை விட குறைவானதாகவே இருக்கும் என கூறினார்.
நுகர்வு வீழ்ச்சி, தனியார் முதலீடுகள் பற்றாக்குறை மற்றும் மந்தமான ஏற்றுமதி, பொருளாதார மந்த நிலைக்கு அந்நாட்டின் நிதித்துறையும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது என தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து இன்று ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கீதா கோபிநாத் பேசுகையில், நிலம் மற்றும் வேலை தொடர்பாக முக்கியமான சீர்திருத்தங்கள் தேவைபடுகிறது. மேலும், சீரான பொருளாதாரத்திற்கு சீர்திருத்தங்கள் அவசிமானது என்றார். மேலும் 2019ஆம் ஆண்டின் பொருளாதார வளர்ச்சியை விட 2020 ஆம் ஆண்டில் பொருளாதாரம் மேன்மை அடையும் என்று கூறியுள்ளார்.