திருத்தப்பட்ட தேசிய குடியுரிமை சட்டம் தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் 13 கேள்விகளுக்கு அரசாங்கம் பதிலளித்த நகல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அரசங்க வட்டார செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ, தனது ட்விட்டர் பக்கத்தில் தவறாக வழிநடத்த அவர்கள் தவறான தகவல்களுக்கும் அளிக்காதீர்கள் குடியுரிமை திருத்த சட்டத்தின் உண்மை இங்கே உள்ளது என பதிவிட்டுள்ளது .

இச்சட்டம் கட்டுக்கதை என்று கூறப்படுவதை அகற்றுவதற்கான முயற்சிதான். மேலும் இம்முயற்சி முட்டாள்தனமானது.
- குடியுரிமை திருத்த சட்டத்திலிருந்து முஸ்லிம்களை விளக்குவதற்கான நோக்கத்தை சரியாக சொல்லவில்லை. இதற்கான இந்த ஒரு விளக்கத்தையும் அரசாங்கம் கூறவில்லை.
- அதைப்போல தேசிய மக்கள் பதிவேடு மதத்தின் அடிப்படையில் மக்களை வெளியேற்றாது என அரசு கூறியுள்ளது. ஆனால், இது தொடர்பாக கேள்வி கேட்கவில்லை. கேள்வியே குடியுரிமை சட்டத்தை பற்றி தான். கேட்கப்படாத கேள்விக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது.
- என்.ஆர்.சி சட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்படாது என இந்த அறிக்கை கூறுகிறது. ஆனால் உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடு முழுவதும் அமல்படுத்துவதாக பல முறை சொல்லியிருக்கிறார்.
- குடியுரிமை எதனைக்கொண்டு தீர்மானிக்கப்படும் என்ற கேள்விக்கு, பதிலாக வெளிப்டையான பொய்யையும், ஆபத்தான அறியாமையையும் மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது.
2003 ஆம் ஆண்டில், அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான அரசாங்கம் இந்தியாவில் பிறப்பதன் மூலம் குடியுரிமை குறித்த விதிகளை திருத்தியது. அதன்படி, 26 ஜனவரி 1950 முதல் 30 ஜூன் 1987குள் பிறந்த ஒருவர் தானாகவே பிறப்பால் ஒரு குடிமகன் ஆகிவிடுகிறார்.
1 ஜூலை 1987 முதல் 6 ஜனவரி 2004குள் பிறந்திருந்தால், உங்கள் பெற்றோரில் ஒருவர் இந்திய குடிமகன் என்பதை நிரூபிக்க வேண்டும்.
7 ஜனவரி 2004 அன்று பிறந்திருந்தாலோ அல்லது அதற்குப் பிறகு பிறந்திருந்தாலோ, பெற்றோர் இருவரும் குடிமக்களாக இருந்தால் மட்டுமே இந்தியாவின் குடிமகனாக அங்கீகரிக்கப்படும். அவ்வாறு இல்லையெனில், பெற்றோர் ஒருவர் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் என முத்திரை குத்தப்படும். இதன் விளைவாக, குடியுரிமைச் சட்டத்தின் கீழ் விதிகள் பின்பற்றப்பட்டால், இந்த புராணக்கதை ஆவணம் கூறுவது போல, 1987 க்குப் பிறகு பிறந்தவர்கள் தங்கள் பெற்றோர் தொடர்பான ஆவணங்களைக் காட்ட வேண்டும்.
ஜனவரி 7, 2004 க்குப் பிறகு பிறந்தவர்களுக்கு, இது நம்பமுடியாத அளவிற்கு நியாயமற்ற செயலாக மாறும் சூழலில், முஸ்லிமல்லாதவர்களை இந்த வரையையிலிருந்து வெளியேற்றுகிறது. ஒரு வேலை நாம் இந்தியாவில் பிறந்ததற்கான ஆதாரம் மட்டும் போதுமென அரசாங்கம் கூறினாலும், இங்கு 90 சதவிகிதம் மக்கள் ஆதார் அட்டை வைத்திருக்கிறோம். ஆனால் அதில் பிறந்த ஊர் பெயர் குறிப்பிடுவது இல்லை.
இந்தியாவில் பெரும்பாலா மக்களிடம் பிறப்பு சான்றிதழ்கள் கிடையாது. பிறப்பை கொண்டே குடியுரிமை வாங்கி விடலாமென்றால், அந்நேரம் பிறப்பு சான்றிதழ் இல்லாமல் போனால், அதன் விளைவு மோசமானதாக இருக்கும்.
நாத்திகர்கள், திருநங்கைகள், பெண்கள் மற்றும் கல்வியறிவற்றவர்கள் விலக்கப்பட மாட்டார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் அவர்களின் குடியுரிமையை நிரூபிப்பதற்கான நடைமுறை சிக்கல்கள் எத்தனை அறியாமை கொண்டது என இன்னும் மத்திய அரசு உணர்ந்துகொள்ளவில்லை. இது தொடர்பாக எத்தனை ஆய்வறிக்கைகள் வெளியானாலும் இந்த நிலை மாறாது. சிறிய மக்கள் தொகை கொண்ட அசாமில் என்.ஆர்.சி அமல்படுத்த, செயல்முறை எவ்வளவு கடினமாக இருக்கும் என்பதை நிரூபித்துள்ளது. இந்நிலையில், மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று அரசாங்கம் உத்தரவாதம் அளிக்க முடியுமா? இத்தகைய குளறுபடிகள் இருப்பதனால் தான் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் பேச்சு பொருளாகியுள்ளது.


