குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு: டெல்லியில் போராட்டம்!

நாடு முழுவதும் தீவிரமான போராட்டம் நடந்து வரும் நிலையில், திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வாருகிறார்கள்.

தேசிய குடியுரிமை திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது. இதனை தொடர்ந்து வடகிழக்கு மாநிலங்களில் எழுந்த போராட்டத்தை ஒடுக்குவதாற்காக மத்திய அரசு துப்பாக்கி சூடு நடத்தியது.

விளம்பரம்
குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு: டெல்லியில் போராட்டம்! 1
டெல்லியில் தேசிய குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு ஆதரவாக நடந்து வரும் போராட்டம்

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையும் காவல்துறை தடியடி நடத்தி கலைத்தது. பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து மாணவர்களை தாக்கிய சம்பவம், நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் நாடு முழுக்க போராட்டம் நடைபெற ஊந்தி தள்ளியது.

நாடு முழுக்க 12க்கும் மேற்பட்ட நகரங்களில் போராட்டம் நடந்து வரும் நிலையில், பாஜக ஆளும் மாநிலங்களில் ஊரடங்கு தடை உத்தரவு, துப்பாக்கி சூடு போன்ற அடக்குமுறைகளை ஏவி வருகிறது. இப்போராட்டத்தால் டெல்லியின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதித்துள்ளது.

விளம்பரம்

நிலைமை இப்படி இருக்கையில், ஒரு கூட்டம் இச்சட்டத்திற்கு ஆதவாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. டெல்லியில் உள்ள மத்திய பூங்கா பகுதியில் பாஜகவின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி சங்கத்தை சார்ந்த 5000கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக போராடி வருகிறார்கள்.

விளம்பரம்

Leave a Comment