நியூசிலாந்து வெற்றி

முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவிற்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.

நியூசிலாந்து வெற்றி 1

நியூசிலாந்துக்கு மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணி டி20 தொடர்களில் வெயிட்வாஸ் செய்து தொடரை கைப்பற்றியது.

இந்நிலையில் ஹேமில்டனில் இன்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்களால் மயங்க் அகர்வால்-பிரித்வி ஷா ஜோடி களம் இறங்கியது.

பிரித்வி ஷா 3 பவுண்டரிகள் அடித்து 20 ரன்களில் வெளியேறினார். இதனை தொடர்ந்து மயங்க் அகர்வால் 31 ரன்களில் செளதி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து களம் இறங்கிய கோலி மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் ஜோடி நிதானமாக விளையாட தொடங்கினர். 25-வது ஓவரின் முடிவில் இந்திய அணி, 2 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்தது.

பின்னர் 51 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சோதியின் பந்தில் போல்டாகி கோலி வெளியேறினார். இதனை தொடர்ந்து ஆட வந்த ராகுல் அதிரடியாக விளையாட ஆரம்பித்தார்.

இதனால் 40வது ஓவரின் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் எடுத்தது. 101 பந்துகளில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார் ஷ்ரேயஸ் ஐயர். எனினும் கூடுதலாகப் பெரிய அளவில் ரன்கள் சேர்க்காமல் 103 ரன்களில் செளதி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 347 ரன்கள் எடுத்தது. ராகுல் 64 பந்துகளில் 6 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 88 ரன்களும் ஜாதவ் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 26 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். 

348 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணியின் கப்தில், தாக்குர் பந்துவீச்சில் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். ப்ளண்டல், 9 ரன்களில் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் வெளியேறினார். இதனால் இந்திய அணி வெற்றி பெற்று விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் நிக்கோலஸ் 82 பந்துகளில் 78 ரன்கள் குவித்தார். அதேபோல் 73 பந்துகளில் சதமடித்தார் டெய்லர்.

கடைசி ஓவர் வரை இழுக்காமல் 48.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 348 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது நியூஸிலாந்து அணி. டெய்லர் 109, சான்ட்னர் 12 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். ஷர்துல் தாக்குர் 9 ஓவர்களில் 1 விக்கெட் எடுத்து 80 ரன்கள் கொடுத்தார். குல்தீப் யாதவ், 10 ஓவர்களில் 2 விக்கெட் எடுத்து 84 ரன்கள் கொடுத்தார். 

3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது நியூஸிலாந்து அணி. 2-வது ஒருநாள் ஆட்டம் பிப்ரவரி 8 அன்று நடைபெறுகிறது.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்