Categories: சமூகம்

வெங்காயத்தின் விலை உயர்வு! ஆப்கான், எகிப்து, ஈரான் மற்றும் துருக்கியில் இருந்து வெங்காயம் இறக்குமதி!!

வெளியிட்டது
வெங்காயத்தின் விலை உயர்வு! ஆப்கான், எகிப்து, ஈரான் மற்றும் துருக்கியில் இருந்து வெங்காயம் இறக்குமதி!! 1

ஆப்கான், எகிப்து, ஈரான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய இந்தியா திட்டமிட்டு உள்ளது. வெங்காய உற்பத்தியில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் இருந்தது. அந்த மாநிலத்தின் நாசிக் மாவட்டத்தில் உள்ள லாசல்கான் வெங்காய சந்தையில் இருந்துதான் நாடு முழுவதற்கும் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக கர்நாடக மாநிலத்திலும் வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இம்மாநிலங்களில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கொட்டித் தீர்த்ததன் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் வெங்காய பயிர்கள் அழிந்து சேதமடைந்த நிலையில், இந்தியாவில் வெங்காயத்தின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வெங்காயத்தின் உற்பத்தி பெருமளவு குறைந்திருக்கும் நிலையில், அதன் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால், பொதுமக்கள் வெங்காயம் வாங்குவதை குறைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

இந்நிலையில் அமைச்சர்களுக்கு இடையிலான குழு கூட்டத்தில் வெங்காய தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு குறித்து விவாதிக்கப்பட்டு அதில், வெங்காய தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. ஈரான், துருக்கி மற்றும் எகிப்து போன்ற நாடுகளிலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டது.

உடனடி தேவைக்காக, முதல்கட்டமாக 80 கண்டெய்னர்களில் வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்பிறகு சந்தையில் ஏற்படும் தேவைக்கேற்ப வெங்காயத்தை இறக்குமதி செய்யவும், முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், அதிகரித்த வெங்காயத்தின் விலை மீண்டும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்