தேவையற்ற ஆழ்துளைக் கிணறுகளை மூடுவதே சுஜித்துக்கு செலுத்தும் அஞ்சலி! வருவாய் துறை நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் பேச்சு!!

தேவையற்ற ஆழ்துளைக் கிணறுகளை மூடுவதே சுஜித்துக்கு செலுத்தும் அஞ்சலி! வருவாய் துறை நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் பேச்சு!! 1

நீர்நிலைகளில் விபத்து மற்றும் பேரிடர் காலத்தில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி விழிப்புணர்வு சென்னையில் நடைபெறுகிறது. சென்னை கலைவாணர் அரங்கில் தீயணைப்பு வீரர்கள், பேரிடர் மேலாண்மை குழுவினர் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இந்த நிகழ்ச்சியை தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் துவக்கி வைத்தார்.

அதுமட்டுமின்றி, வருவாய், பேரிடர் நிர்வாக துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன், மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி, தீயணைப்பு துறை பொறுப்பு டிஜிபி சைலேந்திர பாபு, ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

சென்னையில் நடைபெறும் பேரிடர் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சியில் பேசிய வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தை விபத்தில்லா மாநிலமாக மாற்ற அனைத்து நடவடிக்கைகளையும் அரசு தீவிரமாக எடுத்து வருகிறது என கூறினார். குழந்தை சுஜித் போன்று இன்னொரு மரணம் ஏற்படக்கூடாது என்பதற்காக அரசு முழுமூச்சாக நடவடிக்கை எடுத்து வருகிறது. சுஜித் மீட்பு பணியில் நாங்கள் என்ன செய்தோம் என்பது எங்கள் மனசாட்சிக்கு தெரியும். பயனற்ற ஆள்துளைக் கிணறுகளை மூடுவதே சுஜித்துக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி எனவும் பேசினார்.

விளம்பரம்

Leave a Comment