வாட்சப்பில் Status வைத்து விட்டு ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட மாணவன்.!

வெளியிட்டது

ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பணம் நகைகளை இழந்த கல்லூரி இறுதி ஆண்டு மாணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. திருச்சி மணப்பாறையை அடுத்த கிராமத்தை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரின் மகன் சந்தோஷ். 23 வயதாகும் அவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் கல்லூரி இறுதி ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் ஆன்லைனில் ரம்மி விளையாட ஆரம்பித்துள்ளார். பின்னர் அந்த விளையாட்டிற்கு அவர் அடிமையாகி இருக்கிறார். இதில் பல்லாயிரம் ரூபாய் பணங்களை அவர் இழந்திருக்கிறார். தொடர்ந்து பணத்தை இழந்து வந்த சந்தோஷ், ஒரு கட்டத்தில் வீட்டிலிருந்த மூன்று பவுன் நகைகளை எடுத்து விற்று அதையும் ஆன்லைன் ரம்மியில் போட்டு விளையாடி இருக்கிறார்.

வாட்சப்பில் Status வைத்து விட்டு ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட மாணவன்.! 1

அப்படியும் பணம் போதாத காரணத்தினால், மோதிரத்தை ஒன்றை எடுத்து விற்று அதையும் ஆன்லைன் ரம்மியிலேயே போட்டு இருக்கிறார். அனைத்து பணத்தையும் தோல்வியடைந்த சந்தோஷ் விரக்தியில் இருந்து உள்ளார். இது குறித்து குடும்பத்தினர் சந்தோஷிடம் கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும் வீட்டிலிருந்த நகைகள் மாயமானது குறித்தும் அவர்கள் கேள்வி எழுப்பினர். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளான சந்தோஷ், வீட்டை விட்டு வெளியேறி இரண்டு நாட்களாக காணாமல் போய்விட்டார். பெற்றோர்கள் அவரை தேடி வந்த நிலையில் நேற்று இரவு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் சந்தோஷ். மணப்பாறை ரயில் நிலையத்திற்கு வந்த அவர் இரவி ரயிலில் பாய்ந்து தனது உயிரை மாய்த்துக் கொண்டார். இதை அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அவரது கை, கால், உடல் என தனித்தனியாக சிதறி கடந்துள்ளது.

உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். தற்கொலை செய்து கொள்வதற்கு முன் இரவு தனது whatsapp ஸ்டேட்டஸில் சந்தோஷ் குமார் , தனது மரணத்திற்கு முழு காரணம் ஆன்லைன் ரம்மி தான் அதில் அடிமையாகி நான் அதிக பணத்தை இழந்ததால் என்னுடைய உயிரை மாய்த்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டு பின்னர் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த நிகழ்வு அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அடிமையாகி பலரும் உயிரை மாய்த்து வரும் நிலவில் 23 வயதாகும் சந்தோஷ் குமாரும் உயிரை மறைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று பலரும் குரல் கொடுத்து வரும் நிலையில், அரசு இன்னமும் மவுனம் காத்து வருகிறது. இனியாவது அரசு முடிவு எடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Youtube Video Code Embed Credits: NewsTamil 24×7

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

View Comments

வெளியிட்டது

புதிய செய்திகள்