ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை இருக்கும் விஷயத்தை மறைத்து திருமணம் செய்துகொண்டார்..அர்னவ் பேட்டி

ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை இருப்பதை மறைத்து தன்னை திருமணம் செய்து கொண்டிருக்கிறார் என்று திவ்யா மீது அர்னவ் குற்றம் சாட்டியிருக்கிறார். இன்று காலை முதலே இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஒரு நிகழ்வு தான் அர்னவ் மற்றும் திவ்யா இருவருக்கும் இடையில் நடக்கும் சண்டை. சன் தொலைக்காட்சியில் கேளடி கண்மணி, செவ்வந்தி, மகராசி போன்ற சீரியல்களில் நடித்து வருபவர் திவ்யா ஸ்ரீதர். இவர் பெங்களூர்வை சேர்ந்தவர். 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான கேளடி கண்மணி என்கிற சீரியலில் தன்னுடன் நடித்த அர்னவ் என்பவரை காதலித்து வந்தார். 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதற்கு முன்பு இருவரும் லிவ்விங் டு கெதரில் வாழ்ந்து வந்தனர்.

ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை இருக்கும் விஷயத்தை மறைத்து திருமணம் செய்துகொண்டார்..அர்னவ் பேட்டி 1

விளம்பரம்

அர்னவ் முஸ்லிம் என்பதால் தன்னை மதம் மாறச் சொல்லி கட்டாயப்படுத்தியதாகவும், அப்போதுதான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியதாலும், தான் முஸ்லிமாக மாறிவிட்டதாக திவ்யா கூறியிருந்தார். மேலும் மூன்று மாதமாக கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவருக்கு வேறு ஒரு சின்னத்திரை நடிகையுடன் நெருக்கம் ஏற்பட்டதால் தன்னை விட்டு விலகியதாகவும், அதனால் ஏற்பட்ட பிரச்சனையில் தன்னை கர்ப்பிணி என்று கூட பார்க்காமல் அடித்து கீழே தள்ளி உதைத்ததால் தனக்கு ரத்தம் வந்தது, கரு எப்போது வேணாலும் வேண்டுமானாலும் கலையலாம். எனவே தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் காலையில் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டு இருந்தார் திவ்யா. தற்போது ஒரு செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ள அர்னவ் இந்த தகவலை முற்றிலும் மறுத்திருக்கிறார்.

தொடர்புடையவை  பிக்பாஸ் கேட்ட தமிழ் கேள்விகளுக்கு பதில் சொல்ல தெரியாமல் முழித்த ஹவுஸ்மேட்ஸ். !

ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை இருக்கும் விஷயத்தை மறைத்து திருமணம் செய்துகொண்டார்..அர்னவ் பேட்டி 3

விளம்பரம்

தான் திவ்யா ஸ்ரீதரை அடிக்கவே இல்லை, ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை இருப்பதை தன்னிடம் இருந்து மறைத்து தன்னை ஏமாற்றி திவ்யா திருமணம் செய்து கொண்டார் என்று அர்னவ் கூறினார். இந்த நிலையில் திவ்யாவின் வழக்கறிஞர் அர்னவ் மீது வழக்கு பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து முழுமையான விசாரணை மேற்கொள்வதற்காக கீழ்பாக்கத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள திவ்யாவை பார்க்க போலீசார் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். இதனால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Thanthi Tv

விளம்பரம்

Leave a Comment